83. (மேற்கூறப்பட்ட) இவை நமது உறுதிமிக்க ஆதாரங்களாகும். இப்றாஹீம் தன் மக்களைத் (தர்க்கத்தில்) வெல்வதற்காக, நாம் இவற்றை அவருக்குக் (கற்றுக்) கொடுத்தோம். நாம் விரும்பியவர்களின் பதவிகளை நாம் எவ்வளவோ உயர்த்தி விடுகிறோம். (நபியே!) நிச்சயமாக உமது இறைவன் மிக ஞானமுடையவன், மிகுந்த அறிவுடையவன் ஆவான்.
الترجمة التاميلية
وَتِلۡكَ حُجَّتُنَآ ءَاتَيۡنَٰهَآ إِبۡرَٰهِيمَ عَلَىٰ قَوۡمِهِۦۚ نَرۡفَعُ دَرَجَٰتٖ مَّن نَّشَآءُۗ إِنَّ رَبَّكَ حَكِيمٌ عَلِيمٞ
இவை நம்முடைய ஆதாரங்களாகும், நாம் இவற்றை இப்றாஹீமுக்கு அவருடைய கூட்டத்திற்கு எதிராகக் கொடுத்தோம்; நாம் விரும்புவோருக்கு பதவிகளை (மேலும் மேலும்) உயர்த்துகிறோம்; நிச்சயமாக உம்முடைய இறைவன் பூரண ஞானமும் பேரறிவும் உள்ளவன்.
Jan Trust Foundation - Tamil translation
இவை நம் சான்றாகும். அவற்றை அவருடைய சமுதாயத்திற்கு எதிராக இப்றாஹீமுக்கு கொடுத்தோம். நாம் நாடியவர்களை பதவிகளால் உயர்த்துகிறோம்.(நபியே!) நிச்சயமாக உம் இறைவன் ஞானவான்,நன்கறிபவன்.
الترجمة التاميلية - عمر شريف