90. (நபியே!) இவர்கள் அனைவரையும் அல்லாஹ் நேரான வழியில் செலுத்தினான். ஆகவே, அவர்களுடைய நேரான வழியை நீரும் பின்பற்றுவீராக. மேலும், ‘‘இ(ந்தக் குர்ஆனை உங்களுக்கு அறிவிப்ப)தற்காக நான் உங்களிடம் ஒரு கூலியையும் கேட்கவில்லை. உலகத்தார் அனைவருக்கும் இது ஒரு நல்லுபதேசமாகும்'' என்று கூறுவீராக.
الترجمة التاميلية
أُوْلَـٰٓئِكَ ٱلَّذِينَ هَدَى ٱللَّهُۖ فَبِهُدَىٰهُمُ ٱقۡتَدِهۡۗ قُل لَّآ أَسۡـَٔلُكُمۡ عَلَيۡهِ أَجۡرًاۖ إِنۡ هُوَ إِلَّا ذِكۡرَىٰ لِلۡعَٰلَمِينَ
இவர்கள் யாவரையும் அல்லாஹ் நேர்வழியில் செலுத்தினான்; ஆதலால், இவர்களுடைய நேர்வழியையே நீரும் பின்பற்றுவீராக "இதற்காக நாம் உங்களிடம் எவ்வித பிரதிபலனையும் கேட்கவில்லை இது (இக்குர்ஆன்) உலக மக்கள் யாவருக்கும் நல்லுபதேசமேயன்றி வேறில்லை" என்றுங் கூறுவீராக.
Jan Trust Foundation - Tamil translation
(நபியே!) அவர்கள் அல்லாஹ் நேர்வழி செலுத்தியவர்கள். ஆகவே, அவர்களுடைய நேர்வழியையே, அதையே பின்பற்றுவீராக. "இதற்காக உங்களிடம் ஒரு கூலியையும் நான் கேட்க மாட்டேன். அகிலத்தார்களுக்கு ஒரு நல்லுபதேசமே தவிர இது வேறில்லை'' என்று கூறுவீராக.
الترجمة التاميلية - عمر شريف