108. (நபியே!) நீர் கூறுவீராக: ‘‘மனிதர்களே! நிச்சயமாக உங்கள் இறைவனிடமிருந்தே இந்தச் சத்திய வேதம் உங்களிடம் வந்திருக்கிறது. எவன் (இதைப் பின்பற்றி) நேரான வழியில் செல்கிறானோ அவன் தன் நன்மைக்காகவே அந்த நேரான வழியில் செல்கிறான். எவன் (இதைப் பின்பற்றாது) வழிதவறி விடுகிறானோ அவன் நிச்சயமாகத் தனக்குக் கேடான வழியிலேயே செல்கிறான். மேலும், நான் உங்களை (நிர்ப்பந்தித்து) நிர்வகிக்க அதிகாரம் பெற்றவன் இல்லை.
الترجمة التاميلية
قُلۡ يَـٰٓأَيُّهَا ٱلنَّاسُ قَدۡ جَآءَكُمُ ٱلۡحَقُّ مِن رَّبِّكُمۡۖ فَمَنِ ٱهۡتَدَىٰ فَإِنَّمَا يَهۡتَدِي لِنَفۡسِهِۦۖ وَمَن ضَلَّ فَإِنَّمَا يَضِلُّ عَلَيۡهَاۖ وَمَآ أَنَا۠ عَلَيۡكُم بِوَكِيلٖ
(நபியே!) நீர் கூறுவீராக் "மனிதர்களே! நிச்சயமாக உங்கள் இறைவனிடமிருந்து உங்களுக்கு சத்திய(வேத)ம் வந்துவிட்டது; எனவே யார் (அதைப் பின்பற்றி) நேரான வழியில் செல்கிறாரோ அவர் தம் நன்மைக்காகவே அந்நேர்வழியில் செல்கின்றார்; எவர் (அதை ஏற்க மறுத்து) வழி தவறினாரோ, நிச்சயமாக அவர்க தமக்குக் கேடான வழியிலே செல்கிறார்; நான் (உங்களைக் கட்டாயப்படுத்தி) உங்கள் காரியங்களை நிர்வகிக்க அதிகாரம் பெற்றவனல்லன்."
Jan Trust Foundation - Tamil translation
(நபியே!) கூறுவீராக! “மக்களே! உங்கள் இறைவனிடமிருந்து உண்மை (வேதம்) உங்களுக்கு வந்துவிட்டது. எவர் (அதன் படி) நேர்வழி சென்றாரோ அவர் நேர்வழி செல்வதெல்லாம் தன் நன்மைக்காகவே. எவர் வழிகெட்டாரோ அவர் வழிகெடுவதெல்லாம் தனக்குக் கேடாகத்தான். நான் உங்கள் மீது பொறுப்பாளனாக இல்லை.
الترجمة التاميلية - عمر شريف