97. எவர்கள் (தங்கள் மார்க்கக் கட்டளையை சரிவர நிறைவேற்ற முடியாமல் நிராகரிப்பவர்களின் நாட்டில் இருந்து கொண்டு) தங்களுக்குத் தாமே தீங்கிழைத்துக் கொள்கின்றனரோ அவர்களின் உயிரை வானவர்கள் கைப்பற்றும்பொழுது (அவர்களை நோக்கி ‘‘மார்க்கக் கட்டளையை நிறைவேற்றாது) நீங்கள் எவ்வாறு இருந்தீர்கள்'' என்று கேட்பார்கள். அ(தற்க)வர்கள் ‘‘அந்தப் பூமியில் நாங்கள் சிறுபான்மையினர்களாகவே இருந்தோம்'' என்று (பதில்) கூறுவார்கள். (அதற்கு வானவர்கள்) அல்லாஹ்வுடைய பூமி விசாலமானதல்லவா? நீங்கள் (இருந்த) அவ்விடத்தை விட்டு வெளியேறி இருக்கவேண்டாமா?'' என்று கேட்பார்கள். இவர்களின் ஒதுங்குமிடம் நரகம்தான். அது ஒதுங்கும் இடங்களில் மிகக் கெட்டது!
الترجمة التاميلية
إِنَّ ٱلَّذِينَ تَوَفَّىٰهُمُ ٱلۡمَلَـٰٓئِكَةُ ظَالِمِيٓ أَنفُسِهِمۡ قَالُواْ فِيمَ كُنتُمۡۖ قَالُواْ كُنَّا مُسۡتَضۡعَفِينَ فِي ٱلۡأَرۡضِۚ قَالُوٓاْ أَلَمۡ تَكُنۡ أَرۡضُ ٱللَّهِ وَٰسِعَةٗ فَتُهَاجِرُواْ فِيهَاۚ فَأُوْلَـٰٓئِكَ مَأۡوَىٰهُمۡ جَهَنَّمُۖ وَسَآءَتۡ مَصِيرًا
(அல்லாஹ்வின்ஆணையை நிறைவேற்றாது) எவர் தமக்குத் தாமே அநியாயம் செய்து கொண்டார்களோ அவர்களின் உயிரை மலக்குகள் கைப்பற்றும்போது "நீங்கள் எந்த நிலையில் இருந்தீர்கள்?" என்று கேட்பார்கள். (அதற்கவர்கள்) "நாங்கள் பூமியில் (கொடுமையை எதிர்க்க முடியா) பலஹீனர்களாக இருந்தோம்" என்று கூறுவார்கள். அல்லாஹ்வின் பூமி விசாலமானதாக இல்லையா? அதில் (ஹிஜ்ரத் செய்து) நீங்கள் நாடு கடந்து போயிருக்கக்கூடாதா?" என (மலக்குகள்) கேட்பார்கள்;. எனவே இத்தகையோர் ஒதுங்குமிடம் நரகம் தான்;. சென்றடையும் இடங்களில் அது மிகக் கெட்டதாகும்.
Jan Trust Foundation - Tamil translation
நிச்சயமாக தங்களுக்குத் தாமே தீங்கிழைத்தவர்களாக எவர்களை வானவர்கள் உயிர்வாங்கினார்களோ, (அவர்களிடம் “மார்க்கக் கட்டளையை நிறைவேற்றாது) நீங்கள் எவ்வாறு இருந்தீர்கள்?” என்று கூற, (அதற்கவர்கள்) “இந்தப் பூமியில் நாங்கள் பலவீனர்களாக இருந்தோம்“என்று (பதில்) கூறினார்கள். (அதற்கு வானவர்கள்) அல்லாஹ்வின் பூமி விசாலமானதாக இருக்கவில்லையா? நீங்கள் (இருந்த இடத்தை விட்டு) அதில் ஹிஜ்ரா சென்றிருக்க வேண்டாமா?” என்று கூறினார்கள். இவர்களின் ஒதுங்குமிடம் நரகமாகும். அது மீளுமிடத்தால் (மிகக்) கெட்டுவிட்டது!
الترجمة التاميلية - عمر شريف