12. ‘‘வானங்களிலும் பூமியிலும் உள்ளவை அனைத்தும் யாருக்குரியன?'' என நீர் (அவர்களைக்) கேட்பீராக. (இதற்கு அவர்கள் பதில் கூறுவதென்ன? நீரே அவர்களை நோக்கி இவை அனைத்தும்) ‘‘அல்லாஹ்வுக்குரியனவே!'' என்று கூறுவீராக. அவன் கருணையைத் தன்மீது கடமையாக்கிக் கொண்டிருக்கிறான். (ஆகவேதான், உங்கள் குற்றத்திற்காக இதுவரை உங்களைத் தண்டிக்காதிருக்கிறான். எனினும்,) நிச்சயமாக உங்கள் அனைவரையும் மறுமை நாளில் ஒன்று சேர்ப்பான். அதில் சந்தேகமேயில்லை. எவர்கள் (உண்மையை நிராகரித்து) தங்களுக்குத் தாமே நஷ்டத்தை உண்டு பண்ணிக் கொண்டார்களோ அவர்கள் (இதை) நம்பவே மாட்டார்கள்.
الترجمة التاميلية
قُل لِّمَن مَّا فِي ٱلسَّمَٰوَٰتِ وَٱلۡأَرۡضِۖ قُل لِّلَّهِۚ كَتَبَ عَلَىٰ نَفۡسِهِ ٱلرَّحۡمَةَۚ لَيَجۡمَعَنَّكُمۡ إِلَىٰ يَوۡمِ ٱلۡقِيَٰمَةِ لَا رَيۡبَ فِيهِۚ ٱلَّذِينَ خَسِرُوٓاْ أَنفُسَهُمۡ فَهُمۡ لَا يُؤۡمِنُونَ
"வானங்களிலும், பூமியிலுமுள்ளவை யாருக்குச் சொந்தம்" என்று (நபியே!) நீர் (அவர்களைக்) கேளும்; (அவர்கள் என்ன பதில் கூறமுடியும்? எனவே) "எல்லாம் அல்லாஹ்வுக்கே சொந்தம்" என்று கூறுவீராக அவன் தன் மீது கருணையை கடமையாக்கிக் கொண்டான்; நிச்சயமாக இறுதி நாளில் உங்களையெல்லாம் அவன் ஒன்று சேர்ப்பான்; இதில் எவ்வித சந்தேகமும் இல்லை எவர்கள் தமக்குத் தாமே நஷ்டத்தை உண்டுபண்ணிக் கொண்டார்களோ, அவர்கள் ஈமான் கொள்ளமாட்டார்கள்.
Jan Trust Foundation - Tamil translation
“வானங்களிலும் பூமியிலும் உள்ளவை யாருக்குரியன?” எனக் கூறுவீராக. (நபியே நீர்) கூறுவீராக: (அவை) “அல்லாஹ்வுக்குரியனவே!” கருணை புரிவதை (அவன்) தன் மீது கடமையாக்கினான். நிச்சயமாக உங்களை மறுமை நாளில் ஒன்று சேர்ப்பான். அதில் சந்தேகமேயில்லை. தங்களையே நஷ்டப்படுத்தியவர்கள், அவர்கள் நம்பிக்கை கொள்ளமாட்டார்கள்.
الترجمة التاميلية - عمر شريف