124. அவர்களிடம் ஒரு வசனம் வந்தால் ‘‘அல்லாஹ்வுடைய தூதர்களுக்குக் கொடுக்கப்பட்டது போன்ற (நபித்துவத்)தை எங்களுக்கும் கொடுக்கப்படாத வரை நாங்கள் (அதை) நம்பிக்கை கொள்ளவே மாட்டோம்'' என்று கூறுகின்றனர். நபித்துவத்தை எங்கு (எவருக்கு) அளிப்பது என்பதை அல்லாஹ்தான் நன்கறிவான். குற்றம் செய்யும் இவர்களை இவர்கள் செய்யும் சதியின் காரணமாக அல்லாஹ்விடமிருந்து சிறுமையும், கொடிய வேதனையும் அதிசீக்கிரத்தில் வந்தடையும்.
الترجمة التاميلية
وَإِذَا جَآءَتۡهُمۡ ءَايَةٞ قَالُواْ لَن نُّؤۡمِنَ حَتَّىٰ نُؤۡتَىٰ مِثۡلَ مَآ أُوتِيَ رُسُلُ ٱللَّهِۘ ٱللَّهُ أَعۡلَمُ حَيۡثُ يَجۡعَلُ رِسَالَتَهُۥۗ سَيُصِيبُ ٱلَّذِينَ أَجۡرَمُواْ صَغَارٌ عِندَ ٱللَّهِ وَعَذَابٞ شَدِيدُۢ بِمَا كَانُواْ يَمۡكُرُونَ
அவர்களுக்கு ஏதாவது ஓர் அத்தாட்சி வந்தால், அவர்கள், "அல்லாஹ்வின் தூதர்களுக்குக் கொடுக்கப்பட்டது போல் எங்களுக்கும் கொடுக்கப்படாத வரையில் நாங்கள் நம்பிக்கை கொள்ளவே மாட்டோம்" என்று கூறுகிறார்கள்; அல்லாஹ் தனது தூதை எங்கு, அமைக்க வேண்டுமென்பதை நன்கு அறிவான்; குற்றம் செய்து கொண்டிருப்போருக்கு அவர்கள் செய்யும் சதியின் காரணமாக அல்லாஹ்விடம் சிறுமையும், கொடிய வேதனையும் உண்டு.
Jan Trust Foundation - Tamil translation
அவர்களிடம் ஒரு வசனம் வந்தால் "அல்லாஹ்வுடைய தூதர்கள் கொடுக்கப்பட்டது போன்று நாங்களும் கொடுக்கப்படும் வரை (நாங்கள்) நம்பிக்கை கொள்ளவே மாட்டோம்'' என்று கூறுகின்றனர். தன் தூதுத்துவத்தை எங்கு ஏற்படுத்துவது என்பதை அல்லாஹ் மிகஅறிந்தவன். குற்றம் புரிந்தவர்களை அவர்கள் சூழ்ச்சி செய்து கொண்டிருந்த காரணத்தால் அல்லாஹ்விடம் இருந்து (அவர்களுக்கு கேவலமும்) சிறுமையும் கடுமையான வேதனையும் அடையும்.
الترجمة التاميلية - عمر شريف