128. (இறைவன்) அவர்கள் அனைவரையும் ஒன்று சேர்க்கும் (மறுமை) நாளில், (ஜின் இனத்தாரை நோக்கி) ‘‘ஜின் இனத்தோரே! நீங்கள் மனிதர்களில் பலரை(க் கெடுத்து) உங்களுடன் சேர்த்துக் கொண்டீர்கள் (அல்லவா)'' என்(று கேட்)பான். அதற்கு மனிதர்களில் உள்ள அவர்களின் நண்பர்கள் ‘‘எங்கள் இறைவனே! எங்களில் சிலர் (மாறு செய்த) சிலரைக்கொண்டு பயனடைந்து இருக்கின்றனர். எங்களுக்கு நீ ஏற்படுத்திய காலத்தை நாங்கள் அடைந்து விட்டோம். (எங்களுக்கு என்ன கட்டளை?)'' என்று கேட்பார்கள். (அதற்கு இறைவன்) ‘‘நரகம்தான் உங்கள் தங்குமிடம். (உங்களில்) அல்லாஹ் (மன்னிக்க) நாடியவர்களைத் தவிர (மற்ற அனைவரும் என்றென்றுமே) அதில் தங்கி விடுவீர்கள்'' என்று கூறுவான். (நபியே!) நிச்சயமாக உமது இறைவன், மிக்க ஞானமுடையவன் நன்கறிந்தவன் ஆவான்.
الترجمة التاميلية
وَيَوۡمَ يَحۡشُرُهُمۡ جَمِيعٗا يَٰمَعۡشَرَ ٱلۡجِنِّ قَدِ ٱسۡتَكۡثَرۡتُم مِّنَ ٱلۡإِنسِۖ وَقَالَ أَوۡلِيَآؤُهُم مِّنَ ٱلۡإِنسِ رَبَّنَا ٱسۡتَمۡتَعَ بَعۡضُنَا بِبَعۡضٖ وَبَلَغۡنَآ أَجَلَنَا ٱلَّذِيٓ أَجَّلۡتَ لَنَاۚ قَالَ ٱلنَّارُ مَثۡوَىٰكُمۡ خَٰلِدِينَ فِيهَآ إِلَّا مَا شَآءَ ٱللَّهُۚ إِنَّ رَبَّكَ حَكِيمٌ عَلِيمٞ
அவர்கள் யாவரையும் ஒன்று சேர்க்கும் (மறுமை) நாளில், அவன் (ஜின்களை நோக்கி) "ஓ! ஜின்களின் கூட்டத்தாரே! நீங்கள் மனிதர்களில் அநேகரை (வழிகெடுத்து) உங்களுடன் சேர்த்துக் கொண்டீர்களல்லவா?" என்று கேட்பான். அதற்கு மனிதர்களிலிருந்து அவர்களுடைய நண்பர்கள்; "எங்கள் இறைவா! எங்களில் சிலர் சிலரைக்கொண்டு பலன் அடைந்திருக்கின்றோம். நீ எங்களுக்கு நிர்ணயித்த தவனையை நாங்கள் அடைந்து விட்டோம்" என்று கூறுவார்கள்; அதற்கு அவன், "நரகம் தான் நீங்கள் தங்குமிடமாகும் - அல்லாஹ் நாடினாலன்றி நீங்கள் அதில் என்றென்றும் இருப்பீர்கள் - நிச்சயமாக உமது இறைவன் மிக்க ஞானமுடையோனாகவும், (யாவற்றையும்) நன்கறிந்தவனாகவும் இருக்கின்றான்.
Jan Trust Foundation - Tamil translation
அவன் அவர்கள் அனைவரையும் ஒன்றுசேர்க்கும் நாளில், (ஜின்களை நோக்கி) "ஜின்களின் கூட்டமே! நீங்கள் மனிதர்களில் (வழிகேடர்களை) அதிகப்படுத்தி விட்டீர்கள்'' (என்று கூறுவான்). மனிதர்களில் உள்ள அவர்களின் நண்பர்கள் "எங்கள் இறைவா! எங்களில் சிலர் சிலரைக்கொண்டு பயனடைந்தனர். எங்களுக்கு நீ தவணையளித்த தவணையை அடைந்தோம். (எங்களுக்கு தங்குமிடம் எது?)'' என்று கூறுவார்கள். (அதற்கு இறைவன்) "நரகம்தான் உங்கள் தங்குமிடம். அதில் (நீங்கள்) நிரந்தரமானவர்கள், அல்லாஹ் நாடினால் தவிர.'' என்று கூறுவான். (நபியே!) நிச்சயமாக உம் இறைவன், ஞானவான், நன்கறிந்தவன்.
الترجمة التاميلية - عمر شريف