158. வானவர்கள் அவர்களிடம் (நேரில்) வருவதையோ அல்லது உங்கள் இறைவனே (அவர்களிடம்) வருவதையோ அல்லது உங்கள் இறைவனின் பெரியதோர் அத்தாட்சி வருவதையோ தவிர, (வேறெதனையும்) அவர்கள் எதிர் பார்க்கின்றனரா? உங்கள் இறைவனின் பெரியதோர் அத்தாட்சி(யாகிய இறுதி நாள்) வருவதற்கு முன்னர் நம்பிக்கை கொள்ளாதிருந்து அல்லது நம்பிக்கை கொண்டிருந்தும் ஒரு நற்செயலும் செய்யாதிருந்துவிட்டு அந்நாளில் அவர்கள் கொள்ளும் நம்பிக்கை ஒரு பலனையும் அளிக்காது. ஆகவே, (அவர்களை நோக்கி ‘‘அப்பெரிய அத்தாட்சிகளை) நீங்களும் எதிர்பார்த்திருங்கள்; நிச்சயமாக நாமும் எதிர்பார்த்திருக்கிறோம்'' என்று (நபியே!) கூறுவீராக.
الترجمة التاميلية
هَلۡ يَنظُرُونَ إِلَّآ أَن تَأۡتِيَهُمُ ٱلۡمَلَـٰٓئِكَةُ أَوۡ يَأۡتِيَ رَبُّكَ أَوۡ يَأۡتِيَ بَعۡضُ ءَايَٰتِ رَبِّكَۗ يَوۡمَ يَأۡتِي بَعۡضُ ءَايَٰتِ رَبِّكَ لَا يَنفَعُ نَفۡسًا إِيمَٰنُهَا لَمۡ تَكُنۡ ءَامَنَتۡ مِن قَبۡلُ أَوۡ كَسَبَتۡ فِيٓ إِيمَٰنِهَا خَيۡرٗاۗ قُلِ ٱنتَظِرُوٓاْ إِنَّا مُنتَظِرُونَ
மலக்குகள் அவர்களிடம் (நேரில்) வருவதையோ அல்லது உம் இறைவனே (அவர்களிடம்) வருவதையோ அல்லது உம் இறைவனின் அத்தாட்சிகளில் சில வருவதையோ அன்றி (வேறெதனையும்) அவர்கள் எதிர்பார்க்கின்றனரா? உம்முடைய இறைவனின் அத்தாட்சிகளில் சில வரும் அந்நாளில், இதற்கு முன்னால் நம்பிக்கை கொள்ளாமலும், அல்லது நம்பிக்கைக் கொண்டிருந்தும் யாதொரு நன்மையையும் சம்பாதிக்காமலுமிருந்து விட்டு, அந்நாளில் அவர்கள் கொள்ளும் நம்பிக்கை எவ்வித பலனையும் அவர்களுக்கு அளிக்காது - ஆகவே அவர்களை நோக்கி "(அந்த அத்தாட்சிகளை) நீங்களும் எதிர்பாருங்கள்; நாமும் எதிர்ப் பார்க்கின்றோம்" என்று (நபியே!) நீர் கூறும்.
Jan Trust Foundation - Tamil translation
வானவர்கள் அவர்களிடம் (நேரில்) வருவதையோ அல்லது உம் இறைவன் வருவதையோ அல்லது உம் இறைவனின் அத்தாட்சிகளில் சிலது வருவதையோ தவிர (வேறெதையும்) அவர்கள் எதிர்பார்க்கின்றனரா? உம் இறைவனின் அத்தாட்சிகளில் சில வரும் நாளில் அதற்கு முன்னர் நம்பிக்கை கொண்டிருக்காத அல்லது தன் நம்பிக்கையில் ஒரு நன்மையையும் செய்திருக்காத ஓர் ஆன்மாவிற்கு அதன் நம்பிக்கை(யும் நன்மையும்) பலனளிக்காது. (நீங்கள் உங்கள் முடிவை) எதிர்பாருங்கள்; நிச்சயமாக நாங்களும் எதிர்பார்க்கிறோம்” என்று (நபியே!) கூறுவீராக.
الترجمة التاميلية - عمر شريف