31. (ஆகவே,) எவர்கள் அல்லாஹ்வைச் சந்திக்க வேண்டும் என்பதைப் பொய்யாக்குகின்றனரோ அவர்கள் நிச்சயமாக நஷ்டமடைந்தவர்களாகி விட்டனர். (எதிர்பாராதவாறு) திடீரென அவர்களுக்கு (விசாரணைக்) காலம் (என்ற மறுமை) வந்துவிட்டால், அவர்கள் தங்கள் பாவச் சுமைகளைத் தங்கள் முதுகுகளின் மீது சுமந்தவர்களாக, இ(ந்த வேதத்)தை நாங்கள் நம்பாத (குற்றத்)தால் எங்களுக்கு ஏற்பட்ட துக்கமே!'' என்று புலம்புவார்கள். அவர்கள் சுமந்து கொண்டிருப்பவை மிகக் கெட்டவை அல்லவா?
الترجمة التاميلية
قَدۡ خَسِرَ ٱلَّذِينَ كَذَّبُواْ بِلِقَآءِ ٱللَّهِۖ حَتَّىٰٓ إِذَا جَآءَتۡهُمُ ٱلسَّاعَةُ بَغۡتَةٗ قَالُواْ يَٰحَسۡرَتَنَا عَلَىٰ مَا فَرَّطۡنَا فِيهَا وَهُمۡ يَحۡمِلُونَ أَوۡزَارَهُمۡ عَلَىٰ ظُهُورِهِمۡۚ أَلَا سَآءَ مَا يَزِرُونَ
ஆகவே, (மறுமை நாளில்) அல்லாஹ்வைச் சந்திப்பதைப் பொய் என்று கூறியவர்கள் நிச்சயமாக நஷ்டம் அடைந்தவர்களாகி விட்டனர்; அவர்களிடம் மறுமை நாள் திடீரென வரும்பொழுது உலகில் நாங்கள் அலட்சியமாய் இருந்ததற்காக எங்களுக்கு ஏற்பட்ட கை சேதமே என்று கூறுவார்கள். மேலும் அவர்கள் தங்கள் (பாவச்) சுமைகளை தங்கள் முதுகுகளின் மேல் சுமப்பார்கள்; அவர்கள் சுமப்பது மிகவும் கெட்டது என்பதை அறிந்துக் கொள்ளுங்கள்.
Jan Trust Foundation - Tamil translation
அல்லாஹ்வின் சந்திப்பை பொய்ப்பித்தவர்கள் நஷ்டமடைந்து விட்டனர். முடிவில், திடீரென அவர்களுக்கு (விசாரனைக்) காலம் வந்தால், "நாங்கள் (நன்மைகளில்) எவற்றில் குறைசெய்தோமோ அதனால் நேர்ந்த எங்கள் துக்கமே!'' என்று கூறுவர். அவர்களுமோ தங்கள் பாவங்களைத் தங்கள் முதுகுகள் மீது சுமப்பார்கள். அறிந்து கொள்ளுங்கள்! அவர்கள் சுமப்பது மிகக் கெட்டுவிட்டது.
الترجمة التاميلية - عمر شريف