35. (நபியே!) அவர்கள் (உம்மைப்) புறக்கணிப்பது உமக்குப் பெரும் சிரமமாகத் தோன்றினால், உம்மால் முடியுமானால் பூமியில் சுரங்கமிட்டு(ச் சென்றோ) அல்லது வானத்தில் ஓர் ஏணி வைத்து (ஏறியோ அவர்கள் விருப்பப்படி) அத்தாட்சி ஒன்றை நீர் அவர்களுக்குக் கொண்டு வருவீராக. (அப்பொழுதும் அவர்கள் உம்மை நிராகரித்துக் கொண்டே இருப்பார்கள்.) எனினும், அல்லாஹ் நாடினால், அவர்கள் அனைவரையும் நேரான வழியில் ஒன்று சேர்த்து விடுவான். ஆகவே, ஒருபோதும் நீர் அறியாதவர்களுடன் சேர்ந்துவிட வேண்டாம்.
الترجمة التاميلية
وَإِن كَانَ كَبُرَ عَلَيۡكَ إِعۡرَاضُهُمۡ فَإِنِ ٱسۡتَطَعۡتَ أَن تَبۡتَغِيَ نَفَقٗا فِي ٱلۡأَرۡضِ أَوۡ سُلَّمٗا فِي ٱلسَّمَآءِ فَتَأۡتِيَهُم بِـَٔايَةٖۚ وَلَوۡ شَآءَ ٱللَّهُ لَجَمَعَهُمۡ عَلَى ٱلۡهُدَىٰۚ فَلَا تَكُونَنَّ مِنَ ٱلۡجَٰهِلِينَ
(நபியே!) அவர்களின் புறக்கணிப்பு உமக்கு பெருங் கஷ்டமாக இருந்தால், உம்மால் முடியுமானால் பூமியில் சுரங்கம் வைத்து அல்லது வானத்திலே ஓர் ஏணி வைத்து (ஏறிச்சென்று அவர்கள் விருப்பப்படி) ஓர் அத்தாட்சியை அவர்களிடம் கொண்டுவாரும்; (அப்பொழுதும் அவர்கள் உம்மை நிராகரித்துக் கொண்டு தானிருப்பார்கள்.) அன்றியும் அல்லாஹ் நாடினால் அவர்கள் அனைவரையும் நேர் வழியில் ஒன்று சேர்த்து விடுவான்; ஆகவே அறிவில்லாதவர்களில் ஒருவராக நீர் ஆகிவிடவேண்டாம்.
Jan Trust Foundation - Tamil translation
(நபியே!) அவர்களின் புறக்கணிப்பு உமக்கு பெரிதாக இருந்தால், நீ பூமியில் ஒரு சுரங்கத்தை அல்லது வானத்தில் ஓர் ஏணியைத் தேடி, (அதன் மூலம்) ஓர் அத்தாட்சியை அவர்களுக்குக் கொண்டு வருவதற்கு நீர் இயன்றால்... (கொண்டு வாரீர்.) அல்லாஹ் நாடினால், அவர்களை நேர்வழியில் ஒன்று சேர்த்திருப்பான். ஆகவே, அறியாதவர்களில் நிச்சயம் ஆகிவிடாதீர்.
الترجمة التاميلية - عمر شريف