40. (நபியே! அவர்களை நோக்கி) கூறுவீராக: உங்களுக்கு அல்லாஹ்வுடைய வேதனை வந்துவிட்டால் அல்லது உங்களுக்கு விசாரணைக்காலம் வந்துவிட்டால் அல்லாஹ் அல்லாத (இ)வற்றையா நீங்கள் (உங்கள் உதவிக்கு) அழைப்பீர்கள்! என்பதை நீங்கள் சிந்தித்துப் பார்த்தீர்களா? (இந்த சிலைகளை உங்கள் தெய்வங்கள் என்று கூறுகின்ற) நீங்கள் உண்மை சொல்பவர்களாயிருந்தால் (அவற்றையே உங்கள் உதவிக்கு அழையுங்கள்).
الترجمة التاميلية
قُلۡ أَرَءَيۡتَكُمۡ إِنۡ أَتَىٰكُمۡ عَذَابُ ٱللَّهِ أَوۡ أَتَتۡكُمُ ٱلسَّاعَةُ أَغَيۡرَ ٱللَّهِ تَدۡعُونَ إِن كُنتُمۡ صَٰدِقِينَ
(நபியே! அவர்களிடம்) நீர் கூறும்; "அல்லாஹ்வுடைய வேதனை உங்களிடம் வந்து விட்டால், அல்லது (நீங்கள் அஞ்சும்) அந்த (விசாரணைக்) காலம் வந்துவிட்டால் (அதிலிருந்து உங்களைக் காப்பாற்ற) அல்லாஹ்வையன்றி (வேறு யாரையாவது) நீங்கள் உண்மையாளர்களாக இருந்தால் - அழைப்பீர்களா?" என்பதை (நீங்கள் சிந்தித்துப்) பார்த்தீர்களா?
Jan Trust Foundation - Tamil translation
(நபியே!) கூறுவீராக: உங்களுக்கு அல்லாஹ்வின் வேதனை வந்தால் அல்லது உங்களுக்கு (விசாரனைக்) காலம் வந்தால் அல்லாஹ் அல்லாதவர்களையா நீங்கள் அழைப்பீர்கள்? நீங்கள் உண்மையாளர்களாக இருந்தால் (இதன் பதிலை) அறிவியுங்கள்.
الترجمة التاميلية - عمر شريف