31. (நபியே!) நீர் (அவர்களை நோக்கி) ‘‘வானத்திலிருந்தும் பூமியில் இருந்தும் உங்களுக்கு உணவளிப்பவன் யார்? (உங்கள்) செவிக்கும் பார்வைகளுக்கும் உரிமையாளன் யார்? இறந்தவற்றிலிருந்து உயிருள்ளவற்றையும், உயிருள்ள வற்றிலிருந்து இறந்தவற்றையும் வெளிப்படுத்துபவன் யார்? (உலகின்) எல்லாக் காரியங்களையும் திட்டமிட்டு நிர்வகித்து நிகழ்த்துபவன் யார்?'' என்று கேட்பீராக! அதற்கவர்கள் ‘‘அல்லாஹ்தான்'' என்று கூறுவார்கள். அவ்வாறாயின் (அவனுக்கு) நீங்கள் பயப்பட வேண்டாமா?'' என்று கேட்பீராக.
الترجمة التاميلية
قُلۡ مَن يَرۡزُقُكُم مِّنَ ٱلسَّمَآءِ وَٱلۡأَرۡضِ أَمَّن يَمۡلِكُ ٱلسَّمۡعَ وَٱلۡأَبۡصَٰرَ وَمَن يُخۡرِجُ ٱلۡحَيَّ مِنَ ٱلۡمَيِّتِ وَيُخۡرِجُ ٱلۡمَيِّتَ مِنَ ٱلۡحَيِّ وَمَن يُدَبِّرُ ٱلۡأَمۡرَۚ فَسَيَقُولُونَ ٱللَّهُۚ فَقُلۡ أَفَلَا تَتَّقُونَ
"உங்களுக்கு வானத்திலிருந்தும், பூமியிலிருந்தும் உணவளிப்பவன் யார்? (உங்கள்) செவிப்புலன் மீதும், (உங்கள்) பார்வைகளின் மீதும் சக்தியுடையவன் யார்? இறந்தவற்றிலிருந்து உயிருள்ளவற்றையும், உயிருள்ளவற்றிலிருந்து இறந்தவற்றையும் வெளிப்படுத்துபவன் யார்? (அகிலங்களின் அமைத்துக்) காரியங்களையும் திட்டமிட்டுச் செயல்படுத்துபவன் யார்?" என்று(நபியே!) நீர் கேளும். உடனே அவர்கள் "அல்லாஹ்" என பதிலளிப்பார்கள்; "அவ்வாறாயின் அவனிடம் நீங்கள் பயபக்தியுடன் இருக்க வேண்டாமா?" என்று நீர் கேட்பீராக.
Jan Trust Foundation - Tamil translation
(நபியே!) “வானம், பூமியிலிருந்து உங்களுக்கு யார் உணவளிக்கிறார்? அல்லது (உங்கள்) செவிக்கும் பார்வைகளுக்கும் யார் உரிமை கொள்வார்? இறந்ததிலிருந்து உயிருள்ளதையும், உயிருள்ளதிலிருந்து இறந்ததையும் யார் வெளிப்படுத்துவார்? யார் (எல்லா) காரியத்தை(யும்) நிர்வகிக்கிறான்?” என்று கூறுவீராக! அதற்கு, “அல்லாஹ்தான்”என்று கூறுவார்கள். (அவ்வாறாயின் அல்லாஹ்வை) நீங்கள் அஞ்சவேண்டாமா?” என்று கூறுவீராக!
الترجمة التاميلية - عمر شريف