119. (உங்களுக்கு அனுமதிக்கப்பட்டவற்றை அறுக்கும் பொழுது) அல்லாஹ்வின் பெயர் கூறப்பட்(டு அறுக்கப்பட்)டவற்றை நீங்கள் புசிக்காதிருக்க உங்களுக்கு என்ன (தடை)? நீங்கள் நிர்பந்திக்கப்பட்டாலன்றி (புசிக்க) உங்களுக்குத் தடுக்கப்பட்டவை எவையென அவன் உங்களுக்கு விவரித்துக் கூறியே இருக்கிறான். (அவற்றைத் தவிர உங்களுக்கு அனுமதிக்கப்பட்டவற்றில் அல்லாஹ்வின் பெயர் கூறி அறுக்கப்பட்ட அனைத்தையும் நீங்கள் புசிக்கலாம்.) எனினும், பெரும்பான்மையினர் அறியாமையின் காரணமாக தங்கள் இஷ்டப்படியெல்லாம் (மக்களை) வழி கெடுக்கின்றனர். (நபியே!) நிச்சயமாக உமது இறைவன் வரம்பு மீறுபவர்களை நன்கறிவான்.
الترجمة التاميلية
وَمَا لَكُمۡ أَلَّا تَأۡكُلُواْ مِمَّا ذُكِرَ ٱسۡمُ ٱللَّهِ عَلَيۡهِ وَقَدۡ فَصَّلَ لَكُم مَّا حَرَّمَ عَلَيۡكُمۡ إِلَّا مَا ٱضۡطُرِرۡتُمۡ إِلَيۡهِۗ وَإِنَّ كَثِيرٗا لَّيُضِلُّونَ بِأَهۡوَآئِهِم بِغَيۡرِ عِلۡمٍۚ إِنَّ رَبَّكَ هُوَ أَعۡلَمُ بِٱلۡمُعۡتَدِينَ
அல்லாஹ்வின் பெயர் கூறி (உங்களுக்கு அனுமதிக்கப்பட்டவற்றில்) அறுக்கப்பட்டதை நீங்கள் சாப்பிடாமலிருக்க என்ன (தடை) இருக்கிறது? நீங்கள் நிர்ப்பந்திக்கப்பட்டாலன்றி சாப்பிட உங்களுக்கு விலக்கப்பட்டவை எவை என்பதை அல்லாஹ் விவரித்துக் கூறியுள்ளான் - ஆனால் பெரும்பாலோர், அறியாமையின் காரணமாகத் தங்களுடைய மன இச்சைகளின் பிரகாரம் (மனிதர்களை) வழி கெடுக்கிறார்கள்; வரம்பு மீறிச்செல்பவர்களை நிச்சயமாக உம் இறைவன் நன்கு அறிகிறான்.
Jan Trust Foundation - Tamil translation
(அறுக்கும் போது) அதன் மீது அல்லாஹ்வின் பெயர் கூறப்பட்(டு அறுக்கப்பட்)டதிலிருந்து நீங்கள் புசிக்காதிருக்க உங்களுக்கு என்ன ஏற்பட்டது? அவன் உங்களுக்கு தடுத்தவற்றை உங்களுக்கு விவரித்துவிட்டான் (ஆனால் தடுக்கப்பட்ட) அதன் பக்கம் நீங்கள் நிர்பந்திக்கப்பட்டால் தவிர (அப்போது அது ஆகுமாகிவிடும்). நிச்சயமாக அதிகமானோர் கல்வியின்றி தங்கள் ஆசைகளைக் கொண்டு (மக்களை) வழி கெடுக்கின்றனர். (நபியே!) நிச்சயமாக உம் இறைவன் வரம்பு மீறிகளை மிக அறிபவன்.
الترجمة التاميلية - عمر شريف