125. அல்லாஹ் எவர்களுக்கு நேர்வழி காண்பிக்க விரும்புகிறானோ அவர்களுடைய உள்ளத்தை இஸ்லாமின் பக்கம் (செல்ல) விரிவாக்குகிறான். எவர்களை, அவர்களுடைய வழிகேட்டிலேயே விட்டுவிட விரும்புகிறானோ அவர்களுடைய உள்ளத்தை (நிர்ப்பந்தத்தால்) வானத்தில் ஏறுபவ(னி)ன் (உள்ளம்) போல் கஷ்டப்பட்டு சுருங்கும்படியாக்கி விடுகிறான். இவ்வாறே, நம்பிக்கை கொள்ளாதவர்களுக்கு அல்லாஹ் தண்டனை கொடுக்கிறான்.
الترجمة التاميلية
فَمَن يُرِدِ ٱللَّهُ أَن يَهۡدِيَهُۥ يَشۡرَحۡ صَدۡرَهُۥ لِلۡإِسۡلَٰمِۖ وَمَن يُرِدۡ أَن يُضِلَّهُۥ يَجۡعَلۡ صَدۡرَهُۥ ضَيِّقًا حَرَجٗا كَأَنَّمَا يَصَّعَّدُ فِي ٱلسَّمَآءِۚ كَذَٰلِكَ يَجۡعَلُ ٱللَّهُ ٱلرِّجۡسَ عَلَى ٱلَّذِينَ لَا يُؤۡمِنُونَ
அல்லாஹ் யாருக்கு நேர்வழி காட்ட நாடுகிறானோ அவருடைய நெஞ்சை இஸ்லாத்தை ஏற்றுக்கொள்வதற்காக விசாலமாக்குகிறான் - யாரை அவன் வழி கெடுக்க நாடுகிறானோ, அவருடைய நெஞ்சை, வானத்தில் ஏறுபவன் நெஞ்சைப் போல் இறுகிச் சுருங்கும்படிச் செய்கிறான் - இவ்வாறே ஈமான் கொள்ளாதவர்களுக்கு அல்லாஹ் தண்டனையை ஏற்படுத்துகிறான்.
Jan Trust Foundation - Tamil translation
அல்லாஹ் எவரை நேர்வழி செலுத்த நாடுகிறானோ அவருடைய நெஞ்சை இஸ்லாமிற்கு விரிவாக்குகிறான். எவரை, அவன் வழிகெடுக்க நாடுகிறானோ அவருடைய நெஞ்சை வானத்தில் ஏறுபவனைப் போல் இருக்கமானதாகவும் சிரமமானதாகவும் ஆக்குவான். இவ்வாறே, நம்பிக்கை கொள்ளாதவர்கள் மீது அல்லாஹ் தண்டனையை ஆக்குவான்.
الترجمة التاميلية - عمر شريف