137. இவ்வாறே, இணைவைத்து வணங்குபவர்களில் பலர் (தாங்களே) தங்கள் குழந்தைகளைக் கொலை செய்வதை அவர்கள் அழகாகக் காணும்படி அவர்களுடைய தெய்வங்கள் செய்து அவர்களைப் படுகுழியில் தள்ளி, அவர்களுடைய மார்க்கத்தையும் குழப்பமாக்கிவிட்டன. அல்லாஹ் நாடியிருந்தால் அவர்கள் இவ்வாறு செய்திருக்க மாட்டார்கள். ஆகவே, (நபியே!) நீர் அவர்களையும் அவர்களுடைய பொய்க் கூற்றுகளையும் விட்டு விடுவீராக.
الترجمة التاميلية
وَكَذَٰلِكَ زَيَّنَ لِكَثِيرٖ مِّنَ ٱلۡمُشۡرِكِينَ قَتۡلَ أَوۡلَٰدِهِمۡ شُرَكَآؤُهُمۡ لِيُرۡدُوهُمۡ وَلِيَلۡبِسُواْ عَلَيۡهِمۡ دِينَهُمۡۖ وَلَوۡ شَآءَ ٱللَّهُ مَا فَعَلُوهُۖ فَذَرۡهُمۡ وَمَا يَفۡتَرُونَ
இவ்வாறே இணை வைப்போரில் பெரும்பாலோருக்கு, அவர்களுடைய குழந்தைகளையே கொலை செய்வதை அவர்களுடைய தெய்வங்கள் அழகாக்கி வைத்துள்ளன. அவர்களை நாசப்படுத்தி, அவர்களுடைய மார்க்கத்தையும் குழப்பத்திலாக்கிவிட்டன. அல்லாஹ் நாடியிருந்தால் அவர்கள் அப்படிச் செய்திருக்க மாட்டார்கள். எனவே (நபியே!) நீர் அவர்களையும், அவர்களுடைய பொய்யான கூற்றுக்களையும் விட்டு விலகி விடுவீராக.
Jan Trust Foundation - Tamil translation
இவ்வாறே, இணைவைப்பவர்களில் அதிகமானோருக்கு அவர்களை அழிப்பதற்காகவும் அவர்கள் மீது அவர்களுடைய வழிபாட்டை குழப்புவதற்காகவும் தங்கள் குழந்தைகளைக் கொல்வதை அவர்களுடைய ஷைத்தான்கள் அலங்கரித்தன. அல்லாஹ் நாடியிருந்தால் அதை செய்திருக்க மாட்டார்கள். ஆகவே, (நபியே!) அவர்களை அவர்கள் இட்டுக்கட்டுவதுடன் (விட்டு) விடுங்கள்.
الترجمة التاميلية - عمر شريف