143. (நபியே! அந்த மூடர்களை நோக்கி நீர் கேட்பீராக: ‘‘புசிக்கக்கூடிய ஆடு, மாடு, ஒட்டகம் ஆகியவற்றில்) எட்டு வகைகள் இருக்கின்றன. (அவையாவன:) செம்மறி ஆட்டில் (ஆண், பெண்) இருவகை; வெள்ளாட்டில் (ஆண், பெண்) இரு வகை (உண்டு). இவ்விரு வகை ஆண்களையா அல்லது பெண்களையா அல்லது இவ்விரு வகைகளிலுள்ள பெண்களின் கர்ப்பங்களில் உள்ளவற்றையா (இறைவன்) தடை செய்திருக்கிறான்? நீங்கள் உண்மை சொல்பவர்களாக இருந்தால் ஆதாரத்துடன் இதை நீங்கள் எனக்கு அறிவியுங்கள்.
الترجمة التاميلية
ثَمَٰنِيَةَ أَزۡوَٰجٖۖ مِّنَ ٱلضَّأۡنِ ٱثۡنَيۡنِ وَمِنَ ٱلۡمَعۡزِ ٱثۡنَيۡنِۗ قُلۡ ءَآلذَّكَرَيۡنِ حَرَّمَ أَمِ ٱلۡأُنثَيَيۡنِ أَمَّا ٱشۡتَمَلَتۡ عَلَيۡهِ أَرۡحَامُ ٱلۡأُنثَيَيۡنِۖ نَبِّـُٔونِي بِعِلۡمٍ إِن كُنتُمۡ صَٰدِقِينَ
(நபியே! அம்மக்களிடம்) "கால்நடைகளில் எட்டு வகைகள் உள்ளன - செம்மறி ஆட்டில் (ஆண், பெண்) இரு வகை, வெள்ளாட்டில் (ஆண், பெண்) இரு வகை, அவன் (அல்லாஹ்) ஆண் இரண்டையும் ஹராமாக்கி விட்டானா? அல்லது பெட்டை இரண்டையும் ஹராமாக்கி விட்டானா? அல்லது அவ்விரு வகைகளிலுமுள்ள பெண்களின் கர்ப்பங்களில் உள்ளவற்றையா (அவன் தடுத்திருக்கிறான்?) நீங்கள் உண்மை கூறுபவர்களாக இருந்தால், (இதனை) ஆதாரத்துடன் எனக்கு அறிவியுங்கள்" என்று கேட்பீராக.
Jan Trust Foundation - Tamil translation
(நபியே! கால்நடைகளில்) எட்டு ஜோடிகளை (உற்பத்தி செய்தான்). (அவை:) செம்மறி ஆட்டில் (ஆண், பெண்) இரண்டை; வெள்ளாட்டில் (ஆண், பெண்) இரண்டை (படைத்தான்). இ(வ்வி)ரு (வகை) ஆண்களையா அல்லது இ(வ்வி)ரு (வகை) பெண்களையா அல்லது இ(வ்வி)ரு (வகை) பெண்களின் கர்ப்பங்கள் சுமந்தவற்றையா (அல்லாஹ்) தடை செய்தான்? நீங்கள் உண்மையாளர்களாக இருந்தால் கல்வியுடன் (கூடிய ஆதாரத்தை) எனக்கு அறிவியுங்கள்.
الترجمة التاميلية - عمر شريف