145. (நபியே!) கூறுவீராக: ‘‘மனிதன் புசிக்கக்கூடியவற்றில் எதுவும் தடுக்கப்பட்டு விட்டதாக எனக்கு அறிவிக்கப்பட்ட வஹ்யில் நான் காணவில்லை. ஆயினும், செத்தவை, வடியக்கூடிய இரத்தம், பன்றியின் மாமிசம் ஆகியவை நிச்சயமாக அசுத்தமாக இருப்பதனால் இவையும், அல்லாஹ் அல்லாதவற்றின் பெயர் கூறுவது பாவமாய் இருப்பதனால் அவ்வாறு கூறப்பட்டவையும் (தடை செய்யப்பட்டுள்ளன.)'' தவிர வரம்பு மீறி பாவம் செய்யும் நோக்கமின்றி எவரேனும் நிர்ப்பந்திக்கப்பட்டு (இவற்றை புசித்து) விட்டால், (அது அவர்கள் மீது குற்றமாகாது.) நிச்சயமாக உமது இறைவன் மிக்க மன்னிப்பவன், மிகக் கருணையுடையவன். (ஆகவே, மன்னித்து விடுவான்.)
الترجمة التاميلية
قُل لَّآ أَجِدُ فِي مَآ أُوحِيَ إِلَيَّ مُحَرَّمًا عَلَىٰ طَاعِمٖ يَطۡعَمُهُۥٓ إِلَّآ أَن يَكُونَ مَيۡتَةً أَوۡ دَمٗا مَّسۡفُوحًا أَوۡ لَحۡمَ خِنزِيرٖ فَإِنَّهُۥ رِجۡسٌ أَوۡ فِسۡقًا أُهِلَّ لِغَيۡرِ ٱللَّهِ بِهِۦۚ فَمَنِ ٱضۡطُرَّ غَيۡرَ بَاغٖ وَلَا عَادٖ فَإِنَّ رَبَّكَ غَفُورٞ رَّحِيمٞ
(நபியே!) நீர் கூறும்; "தானாக இறந்தவைகளையும் வடியும் இரத்தத்தையும் பன்றியின் மாமிசத்தையும் தவிர உண்பவர்கள் புசிக்கக் கூடியவற்றில் எதுவும் தடுக்கப்பட்டதாக எனக்கு அறிவிக்கப்பட்டதில் நான் காணவில்லை" - ஏனெனில் இவை நிச்சயமாக அசுத்தமாக இருக்கின்றன. அல்லது அல்லாஹ் அல்லாதவற்றின் பெயர் சொல்லி அறுக்கப்பட்டது பாவமாயிருப்பதனால் - (அதுவும் தடுக்கப்பட்டுள்ளது) - ஆனால் எவரேனும் நிர்ப்பந்திக்கபட்டு, வரம்பை மீறாமலும் பாவம் செய்ய நினைக்காமலும் புசித்துவிட்டால் - (அவர்மீது குற்றமாகாது ஏனெனில்) நிச்சயமாக உங்கள் இறைவன் மிக்க மன்னிப்போனாகவும், பெருங் கருணையுடையோனுமாகவும் இருக்கின்றான்.
Jan Trust Foundation - Tamil translation
(நபியே!) கூறுவீராக: "புசிப்பவர் மீது அதைப் புசிக்க தடுக்கப்பட்டதாக எனக்கு வஹ்யி அறிவிக்கப்பட்டதில் நான் (எதையும்) காணவில்லை. (ஆனால்) செத்ததாக அல்லது ஓடக்கூடிய இரத்தமாக, பன்றியின் மாமிசமாக -ஏனெனில் நிச்சயமாக அது அசுத்தமானதாகும்- அல்லது பாவமாக அல்லாஹ் அல்லாதவருக்குப் பெயர் கூறப்பட்(டு அறுக்கப்பட்)டதாக’இருந்தால் தவிர (இவை தடுக்கப்பட்டவையாகும்). பாவத்தை நாடாதவராக, வரம்பு மீறாதவராக எவர் (இவற்றை உண்ண) நிர்ப்பந்திக்கப்பட்டாரோ (அவர் குற்றவாளியல்ல.) நிச்சயமாக உம் இறைவன் மகா மன்னிப்பாளன், பெரும் கருணையாளன்.
الترجمة التاميلية - عمر شريف