150. (மேலும், அவர்களை நோக்கி) நிச்சயமாக அல்லாஹ் இதைத் தடை செய்தான் என்று நீங்கள் உறுதிப்படுத்துவதற்காக உங்கள் சாட்சிகளை அழைத்து வாருங்கள்'' என்று நீர் கூறுவீராக. (அவ்வாறு அவர்களை அழைத்து வந்து) அவர்களும் (அவ்வாறே பொய்) சாட்சி கூறியபோதிலும் (அதற்காக) நீரும் அவர்களுடன் சேர்ந்து (அவ்வாறு) சாட்சி கூறவேண்டாம். மேலும், நம் வசனங்கள் பொய்யெனக் கூறியவர்கள் மற்றும் இறுதி நாளை நம்பிக்கை கொள்ளாதவர்களுடைய மன விருப்பங்களை நீர் பின்பற்றாதீர். அவர்கள்தான் தங்கள் இறைவனுக்கு (பலவற்றை) இணையாக்குகின்றனர்.
الترجمة التاميلية
قُلۡ هَلُمَّ شُهَدَآءَكُمُ ٱلَّذِينَ يَشۡهَدُونَ أَنَّ ٱللَّهَ حَرَّمَ هَٰذَاۖ فَإِن شَهِدُواْ فَلَا تَشۡهَدۡ مَعَهُمۡۚ وَلَا تَتَّبِعۡ أَهۡوَآءَ ٱلَّذِينَ كَذَّبُواْ بِـَٔايَٰتِنَا وَٱلَّذِينَ لَا يُؤۡمِنُونَ بِٱلۡأٓخِرَةِ وَهُم بِرَبِّهِمۡ يَعۡدِلُونَ
"நிச்சயமாக அல்லாஹ் தான் இதனை ஹராமாக்கினான் என சாட்சி சொல்லக்கூடிய உங்கள் சாட்சிகளைக் கொண்டு வாருங்கள்" என்று கூறும்; அவர்கள் சாட்சி கூறினால், (அவர்கள் பொய்யராகவேயிருப்பர்) அவர்களுடன் சேர்ந்து நீர் சாட்சி சொல்ல வேண்டாம் - நம் வசனங்களைப் பொய்ப்பிக்கின்றவர்கள், மறுமையை நம்பாதவர்கள் ஆகியோரின் வீணான மன இச்சைகளை நீர் பின்பற்ற வேண்டாம் - ஏனெனில் அவர்கள் தாம் தங்கள் இறைவனுக்குப் பல தெய்வங்களை இணையாக்குகின்றனர்.
Jan Trust Foundation - Tamil translation
"நிச்சயமாக அல்லாஹ் இதைத் தடை செய்தான் என்று சாட்சியளிக்கின்ற உங்கள் சாட்சிகளை அழைத்து வாருங்கள்'' என்று கூறுவீராக. அவர்கள் (பொய்) சாட்சி அளித்தாலும் நீர் அவர்களுடன் சாட்சியளிக்காதீர். நம் வசனங்களை பொய்ப்பிப்பவர்கள் இன்னும் இறுதிநாளை நம்பிக்கை கொள்ளாமல், தங்கள் இறைவனுக்கு இணைவைப்பவர்களின் ஆசைகளை பின்பற்றாதீர்.
الترجمة التاميلية - عمر شريف