30. (இவ்வாறு கூறும்) அவர்கள் (உயிர்ப்பிக்கப்பட்டு) தங்கள் இறைவனுக்கு முன் நிறுத்தப்படும்பொழுது (நபியே! நீர் அவர்களைக்) காண்பீராயின்! (அது சமயம் இறைவன் அவர்களை நோக்கி, ‘‘விசாரணை நாளாகிய) இது உண்மையல்லவா?'' என்று கேட்பான். (அதற்கு) அவர்கள், ‘‘எங்கள் இறைவனே! உண்மைதான்'' எனக் கூறுவார்கள். (அதற்கு) அவன் ‘‘(இதை) நீங்கள் நிராகரித்துக் கொண்டிருந்ததன் காரணமாக (நரகத்தின்) வேதனையை நீங்கள் சுவைத்துக் கொண்டிருங்கள்'' என்று கூறுவான்.
الترجمة التاميلية
وَلَوۡ تَرَىٰٓ إِذۡ وُقِفُواْ عَلَىٰ رَبِّهِمۡۚ قَالَ أَلَيۡسَ هَٰذَا بِٱلۡحَقِّۚ قَالُواْ بَلَىٰ وَرَبِّنَاۚ قَالَ فَذُوقُواْ ٱلۡعَذَابَ بِمَا كُنتُمۡ تَكۡفُرُونَ
இவர்கள் (உயிர்ப்பிக்கப்பட்டு) இவர்களுடைய இறைவனின் முன் நிறுத்தப்படும்போது இவர்களை நீர் காண்பீராயின் (அது சமயம் இறைவன் கேட்பான்) இது உண்மையல்லவா? என்று "ஆம்! எங்களுடைய ரப்பின் மீது ஆணையாக (மெய்தான்)" என்று இவர்கள் கூறுவார்கள்; அப்போது, "நீங்கள் நிராகரித்துக் கொண்டிருந்த காரணத்தால் வேதனையை அனுபவியுங்கள்" என்று அல்லாஹ் கூறுவான்.
Jan Trust Foundation - Tamil translation
(அவர்கள்) தங்கள் இறைவனுக்கு முன் நிறுத்தப்படும்போது நீர் (அவர்களைப்)பார்த்தால்... (அப்போது இறைவன் "விசாரனை நாளாகிய) இது உண்மை இல்லையா?'' என்று கூறுவான். அவர்கள், "எங்கள் இறைவன் சத்தியமாக! ஏனில்லை. (உண்மைதான்)'' எனக் கூறுவர். "ஆகவே, நீங்கள் நிராகரித்துக் கொண்டிருந்ததனால் வேதனையை சுவையுங்கள்'' என்று (இறைவன்) கூறுவான்.
الترجمة التاميلية - عمر شريف