46. ‘‘அல்லாஹ், உங்கள் கேள்விப்புலனையும் பார்வைகளையும் எடுத்து விட்டு உங்கள் உள்ளங்களின் மீது முத்திரை வைத்துவிட்டால், அல்லாஹ்வை அன்றி எந்த இறைவன் அவற்றை உங்களுக்குக் கொடுப்பான் என்பதை நீங்கள் சிந்தித்தீர்களா?'' என்று (நபியே!) (அவர்களைக்) கேட்பீராக. (நம் ஆற்றலுக்குரிய) அத்தாட்சிகளை எவ்வாறு (விதவிதமாக) விவரிக்கிறோம் என்பதை நீர் கவனிப்பீராக. (இவ்வாறிருந்தும்) பின்னும் அவர்கள் புறக்கணித்தே வருகின்றனர்.
الترجمة التاميلية
قُلۡ أَرَءَيۡتُمۡ إِنۡ أَخَذَ ٱللَّهُ سَمۡعَكُمۡ وَأَبۡصَٰرَكُمۡ وَخَتَمَ عَلَىٰ قُلُوبِكُم مَّنۡ إِلَٰهٌ غَيۡرُ ٱللَّهِ يَأۡتِيكُم بِهِۗ ٱنظُرۡ كَيۡفَ نُصَرِّفُ ٱلۡأٓيَٰتِ ثُمَّ هُمۡ يَصۡدِفُونَ
"அல்லாஹ் உங்களுடைய செவிப்புலனையும், பார்க்கும் சக்தியையும் எடுத்துவிட்டு, உங்கள் இருதயங்களின் மீது முத்திரையிட்டு விடுவானானால் - அதை உங்களுக்கு அல்லாஹ்வையன்றி வேறு எந்த இறைவன் கொடுப்பான்? என்று நீங்கள் (சிந்தித்துப்) பார்த்தீர்களா?" என்று (நபியே!) நீர் கேட்பீராக, (நம்) அத்தாட்சிகளை எவ்வாறு விவரிக்கின்றோம் என்பதை (நபியே!) நீர் கவனிப்பீர்ராக (இவ்வாறு இருந்தும); பின்னரும் அவர்கள் புறக்கணித்தே வருகின்றனர்.
Jan Trust Foundation - Tamil translation
“அல்லாஹ், உங்கள் கேள்விப்புலனையும் உங்கள் பார்வைகளையும் எடுத்தால்; உங்கள் உள்ளங்கள் மீது முத்திரையிட்டால், அல்லாஹ் அல்லாத வணங்கப்படும் கடவுள்(களில்) யார் அவற்றை உங்களுக்குக் கொண்டுவருவார் என்பதை அறிவியுங்கள்?'' என்று (நபியே!) கூறுவீராக. அத்தாட்சிகளை எவ்வாறு விவரிக்கிறோம் என்பதை கவனிப்பீராக. பிறகும், அவர்கள் புறக்கணிக்கின்றனர்.
الترجمة التاميلية - عمر شريف