54. (நபியே!) நம் வசனங்களை நம்பிக்கை கொண்டவர்கள் உம்மிடம் வந்தால் (நீர் அவர்களை நோக்கி, ‘‘ஸலாமுன் அலைக்கும்) உங்கள் மீது சாந்தியும், சமாதானமும் நிலவுவதாக! உங்கள் இறைவன் (உங்களுக்கு) அருள் புரிவதைத் தன்மீது கடமையாக்கிக் கொண்டான். நிச்சயமாக உங்களில் எவரேனும் அறியாமையின் காரணமாக (ஒரு) பாவத்தைச் செய்துவிட்டு, பின்னர் அதற்காக கைசேதப்பட்டு (அதில் இருந்து விலகி) நற்செயல்களைச் செய்தால் (அவருடைய குற்றங்களை இறைவன் மன்னித்து விடுவான். ஏனென்றால்) நிச்சயமாக அவன் மிக மன்னிப்பவன், மிகக் கருணையுடையவன்'' என்று கூறுவீராக.
الترجمة التاميلية
وَإِذَا جَآءَكَ ٱلَّذِينَ يُؤۡمِنُونَ بِـَٔايَٰتِنَا فَقُلۡ سَلَٰمٌ عَلَيۡكُمۡۖ كَتَبَ رَبُّكُمۡ عَلَىٰ نَفۡسِهِ ٱلرَّحۡمَةَ أَنَّهُۥ مَنۡ عَمِلَ مِنكُمۡ سُوٓءَۢا بِجَهَٰلَةٖ ثُمَّ تَابَ مِنۢ بَعۡدِهِۦ وَأَصۡلَحَ فَأَنَّهُۥ غَفُورٞ رَّحِيمٞ
நம் வசனங்களை நம்பியவர்கள் உம்மிடம் வந்தால், "ஸலாமுன் அலைக்கும் (உங்கள் மீது சாந்தியும் சமாதானமும் உண்டாவதாக)" என்று (நபியே!) நீர் கூறும், உங்கள் இறைவன் கிருபை செய்வதைத் தன் மீது கடமையாக்கிக் கொண்டான்; உங்களில் எவரேனும் அறியாமையினால் ஒரு தீமையைச் செய்து விட்டு அதற்குப் பின், பாவத்தை விட்டும் திரும்பி, திருத்திக் கொண்டால், நிச்சயமாக அவன் (அல்லாஹ்) மன்னிப்பவனாகவும், மிக்க கருணையுடையவனாகவும் இருக்கின்றான்.
Jan Trust Foundation - Tamil translation
(நபியே!) நம் வசனங்களை நம்பிக்கை கொள்பவர்கள் உம்மிடம் வந்தால் (அவர்களுக்கு நீர்) கூறுவீராக: “உங்களுக்கு ஈடேற்றம் உண்டாகுக! உங்கள் இறைவன் கருணையை தன்மீது கடமையாக்கினான். நிச்சயமாக உங்களில் எவர் அறியாமையினால் ஒரு தீமையைச் செய்து, பிறகு, அதன் பின்னர் (அதிலிருந்து திருந்தி அல்லாஹ்வின் பக்கம்) திரும்பி, (தன்னை) சீர்திருத்துவாரோ, (அவரை அல்லாஹ் மன்னிப்பான். ஏனென்றால்,) நிச்சயமாக அவன் மகா மன்னிப்பாளன், பெரும் கருணையாளன்.''
الترجمة التاميلية - عمر شريف