70. (நபியே!) எவர்கள் இவ்வுலக வாழ்க்கையால் மயக்கப்பட்டு, தங்கள் மார்க்கத்தை விளையாட்டாகவும் வேடிக்கையாகவும் எடுத்துக் கொண்டார்களோ அவர்களை (அவர்கள் போக்கில்) விட்டுவிடுவீராக. எனினும், ஒவ்வோர் ஆத்மாவும் தன் (தீய) செயல்களின் காரணமாக (மறுமை நாளில்) ஆபத்திற்குள்ளாகும் என்ற உண்மையை நீர் (அவர்களுக்கு) ஞாபகப்படுத்துவீராக. (அந்நாளில்) அதற்குப் பரிந்து பேசுபவர்களோ, உதவி செய்பவர்களோ அல்லாஹ்வையன்றி ஒருவரும் இருக்கமாட்டார். (சாத்தியமான) அனைத்தையும் (பாவிகள் தங்கள் வேதனைக்குப்) பிரதியாகக் கொடுத்தபோதிலும் அது அங்கீகரிக்கப்பட மாட்டாது. இவர்கள் தங்கள் (தீய) செயல்களின் காரணமாகவே ஆபத்திற்குள்ளானார்கள். இவர்களின் நிராகரிப்பின் காரணமாக மிக்க துன்புறுத்தும் வேதனையுடன் (குடிப்பதற்கு) கொதிக்கும் பானமே இவர்களுக்குக் கிடைக்கும்.
الترجمة التاميلية
وَذَرِ ٱلَّذِينَ ٱتَّخَذُواْ دِينَهُمۡ لَعِبٗا وَلَهۡوٗا وَغَرَّتۡهُمُ ٱلۡحَيَوٰةُ ٱلدُّنۡيَاۚ وَذَكِّرۡ بِهِۦٓ أَن تُبۡسَلَ نَفۡسُۢ بِمَا كَسَبَتۡ لَيۡسَ لَهَا مِن دُونِ ٱللَّهِ وَلِيّٞ وَلَا شَفِيعٞ وَإِن تَعۡدِلۡ كُلَّ عَدۡلٖ لَّا يُؤۡخَذۡ مِنۡهَآۗ أُوْلَـٰٓئِكَ ٱلَّذِينَ أُبۡسِلُواْ بِمَا كَسَبُواْۖ لَهُمۡ شَرَابٞ مِّنۡ حَمِيمٖ وَعَذَابٌ أَلِيمُۢ بِمَا كَانُواْ يَكۡفُرُونَ
(நபியே!) யார் தங்கள் மார்க்கத்தை விளையாட்டாகவும் வெறும் வேடிக்கையாகவும் எடுத்துக் கொண்டார்களோ, இன்னும் யாரை இவ்வுலக வாழ்க்கை ஏமாற்றி விட்டதோ அவர்களை விட்டுவிடும். எனினும் அவர்களுக்கு ஒவ்வோர் ஆன்மாவும் தான் செய்த செயல்களின் காரணமாக ஆபத்தில் சிக்கிக்கொள்ளும் (எனும் உண்மையை) குர்ஆனைக் கொண்டு நினைவுறுத்தும். அந்த ஆத்மாவுக்கு அல்லாஹ்வைத்தவிர வேறு பாதுகாவலரோ, பரிந்து பேசுபவரோ இல்லை (தாங்கள் செய்த பாவத்திற்கு) ஈடாக (தங்களால் இயன்ற) அத்தனையும் கொடுத்தாலும், அது அவர்களிடமிருந்து ஒப்புக்கொள்ளப் பட மாட்டாது இவர்கள் தாங்கள் செய்த செய்கைகளாலேயே தங்களை நாசமாக்கிக் கொண்டார்கள்;, இவர்கள் நிராகரித்துக் கொண்டிருந்த காரணத்தால் இவர்களுக்குக் கொதிக்கும் நீரும் துன்புறுத்தும் வேதனையும் உண்டு.
Jan Trust Foundation - Tamil translation
(நபியே!) உலக வாழ்க்கை அவர்களை மயக்கி, தங்கள் மார்க்கத்தை விளையாட்டாகவும் கேளிக்கையாகவும் எடுத்துக் கொண்டவர்களை (விட்டு) விடுவீராக. ஓர் ஆன்மா, தான் செய்ததன் காரணமாக (மறுமையில்) ஆபத்திற்குள்ளாகும் என்பதை இதன் மூலம் நினைவூட்டுவீராக. (அந்நாளில்) பாதுகாவலரோ பரிந்துரையாளரோ, அல்லாஹ்வைத் தவிர அதற்கு இருக்கமாட்டார். அது எவ்வளவு ஈடு கொடுத்தாலும் அதனிடமிருந்து அது ஏற்கப்படாது. இவர்கள் தாங்கள் செய்ததன் காரணமாகவே ஆபத்திற்குள்ளானவர்கள். இவர்கள் நிராகரித்துக் கொண்டிருந்த காரணத்தால் கடுமையான கொதி நீரிலிருந்து குடிபானமும் துன்புறுத்தும் வேதனையும் இவர்களுக்கு உண்டு.
الترجمة التاميلية - عمر شريف