71. (நபியே!) நீர் கேட்பீராக: ‘‘அல்லாஹ்வை விட்டு விட்டு நமக்கு ஒரு நன்மையும், தீமையும் செய்ய சக்தி அற்றவற்றையா நாம் அழைப்போம்? அல்லாஹ் நம்மை நேரான வழியில் செலுத்திய பின்னரும் (நாம்) நம் பின்புறமே திரும்பி விடுவோமா? (அவ்வாறாயின்,) ஒருவனுக்கு நேரான வழியில் அழைக்கக்கூடிய நண்பர்கள் இருந்து அவனை அவர்கள் ‘தம்மிடம் வா' என அழைத்துக் கொண்டிருக்க, அவன் (அவ்வழியில் செல்லாது) ஷைத்தானுடைய ஏமாற்றத்தில் சிக்கி, பூமியில் தட்டழிந்து திரிபவனாக ஆகிவிட்டானோ அவனுக்கு ஒப்பானவர்களாகி விடுவோம்.'' (மேலும்,) நீர் கூறுவீராக: ‘‘நிச்சயமாக அல்லாஹ்வின் வழிதான் நேரான வழி. உலகத்தார் அனைவரின் இறைவனாகிய அவனுக்கே முற்றிலும் தலைசாய்க்க வேண்டும் என நாங்கள் கட்டளையிடப்பட்டுள்ளோம்.''
الترجمة التاميلية
قُلۡ أَنَدۡعُواْ مِن دُونِ ٱللَّهِ مَا لَا يَنفَعُنَا وَلَا يَضُرُّنَا وَنُرَدُّ عَلَىٰٓ أَعۡقَابِنَا بَعۡدَ إِذۡ هَدَىٰنَا ٱللَّهُ كَٱلَّذِي ٱسۡتَهۡوَتۡهُ ٱلشَّيَٰطِينُ فِي ٱلۡأَرۡضِ حَيۡرَانَ لَهُۥٓ أَصۡحَٰبٞ يَدۡعُونَهُۥٓ إِلَى ٱلۡهُدَى ٱئۡتِنَاۗ قُلۡ إِنَّ هُدَى ٱللَّهِ هُوَ ٱلۡهُدَىٰۖ وَأُمِرۡنَا لِنُسۡلِمَ لِرَبِّ ٱلۡعَٰلَمِينَ
(நபியே!) நீர் கூறும்; "நமக்கு யாதொரு நன்மையும், தீமையும் செய்ய இயலாத அல்லாஹ் அல்லாதவற்றையா நாம் அழைப்போம்? அல்லாஹ் நமக்கு நேர் வழி காட்டியபின்னரும் (நாம் வழிதவறி) நம் பின்புறமே திருப்பப்பட்டுவிடுவோமா? அவ்வாறாயின் ஒருவனுக்கு நண்பர்கள் இருந்து அவனை, அவர்கள் "எங்கள் இடம் வந்து விடு" என நேர்வழி காட்டி அழைத்துக் கொண்டிருக்கும் போது ஷைத்தான் அவனை வழிதவறச் செய்ததால் பூமியிலே தட்டழிந்து திரிகிறானே அவனைப் போன்று ஆகிவிடுவோம்." இன்னும் கூறும்; "நிச்சயமாக அல்லாஹ் காட்டும் நேர்வழியே நேர் வழியாகும்; அகிலங்களின் இறைவனுக்கே வழிபடுமாறு நாங்கள் ஏவப்பட்டுள்ளோம்."
Jan Trust Foundation - Tamil translation
(நபியே!) கூறுவீராக: "அல்லாஹ்வைத் தவிர நமக்கு பலனளிக்காதவற்றையும் தீங்கிழைக்காதவற்றையும் அழைப்போமா? நேர்வழி பக்கம் அவனை அழைக்கின்ற நண்பர்கள் அவனுக்கு இருக்க ஷைத்தான்கள் அவனை வழிதவறச் செய்து திகைத்தவனாக பூமியில் இருப்பவனைப் போல், அல்லாஹ் எங்களை நேர்வழிப்படுத்திய பின்னர் எங்கள் குதிங்கால்கள் மேல் (வழிகேட்டின் பக்கம்) திருப்பப்படுவோமா?'' கூறுவீராக: "நிச்சயமாக அல்லாஹ்வின் நேர்வழி அதுதான் நேர்வழியாகும். அகிலத்தார்களின் இறைவனுக்கே நாங்கள் (முற்றிலும்) பணிந்துவிட கட்டளையிடப்பட்டோம்.''
الترجمة التاميلية - عمر شريف