91. அல்லாஹ்வின் தகுதியை அறிய வேண்டியவாறு அவர்கள் அறியவில்லை. ஏனென்றால், ‘‘மனிதர்களில் எவருக்கும் (வேதத்தில்) எதையும் அல்லாஹ் அருளவே இல்லை'' என்று அவர்கள் கூறுகின்றனர். ஆகவே, (நபியே! அவர்களை நோக்கி) நீர் கேட்பீராக: ‘‘மனிதர்களுக்கு ஒளியையும் நேர்வழியையும் தரக்கூடிய (‘‘தவ்றாத்' என்னும்) வேதத்தை நபி மூஸாவுக்கு அருளியது யார்? நீங்கள் அவ்வேதத்தைத் தனித்தனி ஏடுகளாகப் பிரித்து (அவற்றில்) சிலவற்றை வெளிப்படுத்துகிறீர்கள். (உங்கள் நோக்கத்திற்கு மாறான) பெரும்பாலானவற்றை நீங்கள் மறைத்து விடுகிறீர்கள். (அதன் மூலமாகவே) நீங்களும் உங்கள் மூதாதைகளும் அறியாமல் இருந்தவை உங்களுக்கு கற்பிக்கப்பட்டன. (இத்தகைய வேதத்தை உங்களுக்கு அருளியது யார்?'' இதற்கு அவர்கள் பதில் கூறுவதென்ன! நீரே அவர்களை நோக்கி) ‘‘அல்லாஹ்தான் (இறக்கி வைத்தான்)'' என்று கூறி அவர்கள் (தங்கள்) வீண் தர்க்கத்திலேயே விளையாடிக் கொண்டிருக்கும்படியும் விட்டுவிடுவீராக.
الترجمة التاميلية
وَمَا قَدَرُواْ ٱللَّهَ حَقَّ قَدۡرِهِۦٓ إِذۡ قَالُواْ مَآ أَنزَلَ ٱللَّهُ عَلَىٰ بَشَرٖ مِّن شَيۡءٖۗ قُلۡ مَنۡ أَنزَلَ ٱلۡكِتَٰبَ ٱلَّذِي جَآءَ بِهِۦ مُوسَىٰ نُورٗا وَهُدٗى لِّلنَّاسِۖ تَجۡعَلُونَهُۥ قَرَاطِيسَ تُبۡدُونَهَا وَتُخۡفُونَ كَثِيرٗاۖ وَعُلِّمۡتُم مَّا لَمۡ تَعۡلَمُوٓاْ أَنتُمۡ وَلَآ ءَابَآؤُكُمۡۖ قُلِ ٱللَّهُۖ ثُمَّ ذَرۡهُمۡ فِي خَوۡضِهِمۡ يَلۡعَبُونَ
இவர்கள் அல்லாஹ்வை மதிக்க வேண்டிய முறையில் மதிக்கவில்லை ஏனெனில் அவர்கள், "அல்லாஹ் எந்த ஒரு மனிதர் மீதும் எ(ந்த வேதத்)தையும் இறக்கவில்லை" என்று கூறுகின்றனர்; அவர்களிடத்தில் நீர் கூறும்; "பிரகாசமானதாகவும், மனிதர்களுக்கு வழிகாட்டியாகவும் மூஸா கொண்டுவந்தாரே அந்த வேத்தை இறக்கியவன் யார்? அதனை நீங்கள் தனித்தனி ஏடுகளாக ஆக்கி, அவற்றில் சிலவற்றை வெளிப்படுத்துகிறீர்கள்; பெரும்பாலானவற்றை மறைத்தும் விடுகிறீர்கள்; (அவ்வேதத்தின் மூலமாகவே) நீங்களும் உங்கள் மூதாதையர்களும் அறியாமல் இருந்தவைகளையெல்லாம் கற்றுக்கொடுக்கப்பட்டீர்கள்." (நபியே! மேலும்) நீர் கூறுவீராக "அல்லாஹ்தான் (அதை இறக்கிவைத்தான்)" பின்பு அவர்களைத் தம் வீணான (தர்க்கத்)தில் விளையாடிக்கொண்டிருக்குமாறு விட்டுவிடுவீராக.
Jan Trust Foundation - Tamil translation
"மனிதர்கள் மீது (வேதத்தில்) எதையும் அல்லாஹ் இறக்கவில்லை'' என்று அவர்கள் கூறியபோது அல்லாஹ்வை அவனுடைய தகுதிக்கு தகுந்தாற்போல் அவர்கள் அறியவில்லை. (நபியே!) கூறுவீராக: "மக்களுக்கு ஒளியாகவும் நேர்வழியாகவும் மூஸா கொண்டு வந்த வேதத்தை இறக்கியவன் யார்? அதை நீங்கள் பல ஏடுகளாக ஆக்கி அவற்(றில் சிலவற்)றை வெளிப்படுத்தி அதிகமானதை மறைத்தும் விடுகிறீர்கள். நீங்களும் உங்கள் மூதாதைகளும் அறியாதவற்றை (நீங்கள்) கற்பிக்கப்பட்டீர்கள். (நபியே!) "அல்லாஹ் (அதை இறக்கினான்)'' என்று கூறி, அவர்களை அவர்கள் மூழ்குவதிலேயே விளையாடியவர்களாக விடுவீராக.
الترجمة التاميلية - عمر شريف