18. (இணைவைப்பவர்கள்) அல்லாஹ்வை விட்டுவிட்டு அவர்களுக்கு நன்மையும் தீமையும் செய்ய முடியாதவற்றை வணங்குவதுடன் ‘‘இவை அல்லாஹ்விடத்தில் எங்களுக்கு சிபாரிசு செய்பவை'' என்றும் கூறுகின்றனர். (ஆகவே, நபியே! நீர் அவர்களை நோக்கி) ‘‘வானங்களிலோ பூமியிலோ அல்லாஹ்வுக்குத் தெரியாத(வை உள்ளனவா? அ)வற்றை (இவை மூலம்) நீங்கள் அவனுக்கு அறிவிக்கிறீர்களா? (அவனோ அனைத்தையும் நன்கறிந்தவன்;) அவன் மிகப் பரிசுத்தமானவன்; அவர்கள் இணை வைப்பவற்றை விட மிக உயர்ந்தவன்'' என்று கூறுவீராக.
الترجمة التاميلية
وَيَعۡبُدُونَ مِن دُونِ ٱللَّهِ مَا لَا يَضُرُّهُمۡ وَلَا يَنفَعُهُمۡ وَيَقُولُونَ هَـٰٓؤُلَآءِ شُفَعَـٰٓؤُنَا عِندَ ٱللَّهِۚ قُلۡ أَتُنَبِّـُٔونَ ٱللَّهَ بِمَا لَا يَعۡلَمُ فِي ٱلسَّمَٰوَٰتِ وَلَا فِي ٱلۡأَرۡضِۚ سُبۡحَٰنَهُۥ وَتَعَٰلَىٰ عَمَّا يُشۡرِكُونَ
தங்களுக்கு (யாதொரு) நன்மையோ தீமையோ செய்ய இயலாத அல்லாஹ் அல்லாதவற்றை (முஷ்ரிக்குகள்) வணங்குகிறார்கள்; இன்னும் அவர்கள், "இவை எங்களுக்கு அல்லாஹ்விடம் மன்றாட்டம் செய்பவை" என்றும் கூறுகிறார்கள்; அதற்கு நீர்; "வானங்களிலோ, பூமியிலோ அல்லாஹ் அறியாதவை (இருக்கின்றன என எண்ணிக் கொண்டு) நீங்கள் அவனுக்கு அறிவிக்கின்றீர்களா? அவன் மிகவும் பரிசத்தமானவன். அவர்கள் இறைவைப்பவற்றை விட மிகவும் உயர்ந்தவன்" என்று கூறும்.
Jan Trust Foundation - Tamil translation
அல்லாஹ்வை அன்றி அவர்களுக்கு தீங்கிழைக்காத, அவர்களுக்கு பலனளிக்காதவற்றை வணங்குகிறார்கள்; இன்னும் “இவை அல்லாஹ்விடம் எங்கள் சிபாரிசாளர்கள்” என்று கூறுகின்றனர். (ஆகவே, நபியே!) “வானங்களிலும் பூமியிலும் அல்லாஹ்வுக்கு அவன் அறியாதவற்றை நீங்கள் அறிவிக்கிறீர்களா? அவன் மிகப் பரிசுத்தமானவன்; அவர்கள் இணைவைப்பவற்றை விட்டு அவன் உயர்ந்துவிட்டான்”என்று கூறுவீராக.
الترجمة التاميلية - عمر شريف