106. (நபியே!) மனிதர்களுக்கு நீர் சிறிது சிறிதாக ஓதிக் காண்பிக்கும் பொருட்டு இந்த குர்ஆனை பல பாகங்களாக நாம் பிரித்தோம். அதற்காகவே நாம் இதைச் சிறுகச் சிறுகவும் இறக்கிவைக்கிறோம்.
الترجمة التاميلية
وَقُرۡءَانٗا فَرَقۡنَٰهُ لِتَقۡرَأَهُۥ عَلَى ٱلنَّاسِ عَلَىٰ مُكۡثٖ وَنَزَّلۡنَٰهُ تَنزِيلٗا
இன்னும், மக்களுக்கு நீர் சிறிது சிறிதாக ஓதிக் காண்பிப்பதற்காகவே இந்த குர்ஆனை நாம் பகுதி, பகுதியாகப் பிரித்தோம்; இன்னும் நாம் அதனைப் படிப்படியாக இறக்கிவைத்தோம்.
Jan Trust Foundation - Tamil translation
(நபியே!) குர்ஆனை நாம் தெளிவுபடுத்தி (இறக்கி)னோம் மக்களுக்கு இதை நீர் கவனத்துடன் (தெளிவாக) ஓதுவதற்காக. இன்னும் இதை நாம் கொஞ்சம் கொஞ்சமாக இறக்கினோம்.
الترجمة التاميلية - عمر شريف