46. அவர்களுடைய உள்ளங்களிலும், (அவர்கள்) அதை விளங்கிக் கொள்ள முடியாதவாறு திரையை அமைத்து அவர்களுடைய காதுகளைச் செவிடாக்கி விடுகிறோம். திரு குர்ஆனில் உமது இறைவன் ஒருவனைப்பற்றியே நீர் கூறிக் கொண்டிருந்தால், அவர்கள் வெறுத்துத் தங்கள் முதுகுப்புறமே (திரும்பிச்) சென்று விடுகின்றனர்.
الترجمة التاميلية
وَجَعَلۡنَا عَلَىٰ قُلُوبِهِمۡ أَكِنَّةً أَن يَفۡقَهُوهُ وَفِيٓ ءَاذَانِهِمۡ وَقۡرٗاۚ وَإِذَا ذَكَرۡتَ رَبَّكَ فِي ٱلۡقُرۡءَانِ وَحۡدَهُۥ وَلَّوۡاْ عَلَىٰٓ أَدۡبَٰرِهِمۡ نُفُورٗا
இன்னும், அவர்கள் அதனை விளங்கிக் கொள்வதை விட்டும் அவர்களுடைய இருதயங்களின் மேல் மூடிகளையும், அவர்களுடைய காதுகளின் மீது செவிட்டுத்தனத்தையும் நாம் அமைத்து விடுகிறோம்; இன்னும் குர்ஆனில், உம்முடைய இறைவன் ஒருவனை மட்டும் நீர் குறிப்பிடும் போது, அவர்கள் வெறுப்படைந்து தம் பின்புறங்களில் (திரும்பி விரண்டவர்களாகப்) பின்வாங்கி விடுகிறார்கள்.
Jan Trust Foundation - Tamil translation
அவர்களுடைய உள்ளங்கள் மீது அதை அவர்கள் விளங்குவதற்கு (தடையாக) மூடிகளையும் அவர்களுடைய காதுகளில் கனத்தையும் (செவிட்டு தனத்தையும்) ஆக்கிவிடுவோம். குர்ஆனில் உம் இறைவன் ஒருவனை மட்டும் நீர் நினைவு கூர்ந்தால், அவர்கள் (அதை) வெறுத்து தங்கள் பின்புறங்கள் மீது திரும்புகின்றனர் (வெருண்டு ஓடி விடுகின்றனர்).
الترجمة التاميلية - عمر شريف