6. பின்னர் அவர்களுக்கு எதிராக உங்களுக்கு சாதகமாக காலச் சக்கரத்தைத் திருப்பி (உங்களுக்கு வெற்றியைக் கொடுத்து) ஏராளமான பொருள்களையும் ஆண் மக்களையும் கொண்டு நாம் உங்களுக்கு உதவி புரிந்து, உங்களைப் பெரும் கூட்டத்தினராகவும் ஆக்கினோம்.
الترجمة التاميلية
ثُمَّ رَدَدۡنَا لَكُمُ ٱلۡكَرَّةَ عَلَيۡهِمۡ وَأَمۡدَدۡنَٰكُم بِأَمۡوَٰلٖ وَبَنِينَ وَجَعَلۡنَٰكُمۡ أَكۡثَرَ نَفِيرًا
பின்னர் அவர்கள் மீது வெற்றியடையும் வாய்ப்பை உங்கள்பால் திருப்பினோம்; ஏராளமான பொருள்களையும், புதல்வர்களையும் (தந்தது) கொண்டு உங்களுக்கு உதவி செய்து, உங்களைத் திரளான கூட்டத்தினராகவும் ஆக்கினோம்.
Jan Trust Foundation - Tamil translation
பிறகு, உங்களுக்கு சாதகமாக அவர்களுக்கு எதிராக தாக்குதலை திருப்பினோம். செல்வங்கள் இன்னும் ஆண் பிள்ளைகளைக் கொண்டு உங்களுக்கு உதவினோம். (குடும்ப) எண்ணிக்கையில் அதிகமானவர்களாக உங்களை ஆக்கினோம்.
الترجمة التاميلية - عمر شريف