109. (அவர்கள் விருப்பப்படி) ஓர் அத்தாட்சி எங்களுக்காக வரும் சமயத்தில், ‘‘நிச்சயமாக நாங்கள் அதை நம்புவோம்'' என அவர்கள் அல்லாஹ்வின் மீது உறுதியான சத்தியம் செய்து கூறுகின்றனர். (அதற்கு நபியே! நீர் அவர்களை நோக்கி) ‘‘நிச்சயமாக அத்தாட்சிகள் அனைத்தும் அல்லாஹ்விடமே இருக்கின்றன. (அவற்றை அவன் விரும்பியவாறே வெளியாக்குவான். நீங்கள் விரும்புவது போன்றல்ல) என்று கூறுவீராக. (அவ்வாறு) அவர்களிடம் (அவர்கள் விரும்பியவாறே) அத்தாட்சி வந்தாலும் அதை அவர்கள் நம்பிக்கை கொள்ளவே மாட்டார்கள் என்பதை (நம்பிக்கையாளர்களே!) நீங்கள் அறிவீர்களா?
الترجمة التاميلية
وَأَقۡسَمُواْ بِٱللَّهِ جَهۡدَ أَيۡمَٰنِهِمۡ لَئِن جَآءَتۡهُمۡ ءَايَةٞ لَّيُؤۡمِنُنَّ بِهَاۚ قُلۡ إِنَّمَا ٱلۡأٓيَٰتُ عِندَ ٱللَّهِۖ وَمَا يُشۡعِرُكُمۡ أَنَّهَآ إِذَا جَآءَتۡ لَا يُؤۡمِنُونَ
(நிராகரித்துக் கொண்டிருக்கும்) அவர்கள், அல்லாஹ்வின் மீது உறுதியான சத்தியம் செய்து, தங்களுக்கு ஓர் அத்தாட்சி வந்துவிடுமானால் தாம் நிச்சயமாக அதைக் கொண்டு ஈமான் கொள்வதாக கூறுகிறார்கள். (நபியே!) அவர்களிடம்) நீர் கூறும்; அத்தாட்சிகள் யாவும் அல்லாஹ்விடமே இருக்கின்றன. அந்த அத்தாட்சிகள் வரும்பொழுது நிச்சயமாக அவர்கள் ஈமான் கொள்ளமாட்டார்கள் என்பதை உங்களுக்கு எது அறிவித்தது?
Jan Trust Foundation - Tamil translation
(அவர்கள் விருப்பப்படி) ஓர் அத்தாட்சி அவர்களிடம் வந்தால், "நிச்சயமாக அதை நம்பிக்கை கொள்வோம்'' என அவர்கள் அல்லாஹ்வைக் கொண்டு உறுதியாக சத்தியம் செய்தனர். (நபியே!) "அத்தாட்சிகள் எல்லாம் அல்லாஹ்விடமே இருக்கின்றன.'' என்று கூறுவீராக. (அவர்கள் விரும்பியவாறே) நிச்சயமாக அவை வந்தால், அவர்கள் நம்பிக்கை கொள்ள மாட்டார்கள் என்பதை (நம்பிக்கையாளர்களே!) நீங்கள் அறிவீர்களா?
الترجمة التاميلية - عمر شريف