ﯿ
                    surah.translation
            .
            
                            
            
    ﰡ
இன்னும் நட்சத்திரங்கள் விழுந்து சிதறும் போது,
                                                                        இன்னும் கடல்கள் பிளக்கப்ப(ட்)டு (ஒன்றோடு ஒன்று கலக்கப்படு)ம் போது,
                                                                        இன்னும் சமாதிகள் புரட்டப்படும்போது (அதில் உள்ளவர்கள் உயிரோடு எழுப்பப்படும்போது),
                                                                        ஓர் ஆன்மா, தான் முற்படுத்தியதையும் (-முன்னர் செய்ததையும்), பிற்படுத்தியதையும் (-இறுதியாக செய்ததையும்) அறியும்.
                                                                        மனிதனே! கண்ணியவானாகிய உன் இறைவனைப் பற்றி உன்னை ஏமாற்றியது எது?
                                                                        (அவன்தான்) உன்னைப் படைத்தான்; இன்னும் உன்னைச் சீர்செய்தான்; இன்னும் உன்னை (தான் விரும்பிய உருவத்திற்கு) திருப்பினான்.
                                                                        எந்த உருவத்தில் நாடினானோ (அதில்) உன்னைப் பொறுத்தினான்.
                                                                        அவ்வாறல்ல, மாறாக, கூலி கொடுக்கப்படுவதை (விசாரனை நாளை)பொய்ப்பிக்கிறீர்கள்.
                                                                        நிச்சயமாக காவலர்கள் உங்கள் மீது இருக்கின்றனர்.
                                                                        
                                                                                                                
                                    ﮃﮄ
                                    ﰊ
                                                                        
                    (அவர்கள்,) கண்ணியமான எழுத்தாளர்கள்.
                                                                        நீங்கள் செய்வதை அவர்கள் அறிகிறார்கள் (பிறகு அதைப் பதிகிறார்கள்).
                                                                        நிச்சயமாக நல்லோர் ‘நயீம்' என்ற சொர்க்கத்தில்தான் இருப்பார்கள்.
                                                                        நிச்சயமாகத் தீயோர் "ஜஹீம்து என்ற நரகத்தில்தான் இருப்பார்கள்.
                                                                        கூலி (வழங்கப்படும்) நாளில் அதில் (நரக நெருப்பில்) எரிவார்கள்.
                                                                        இன்னும் அவர்கள் அதிலிருந்து மறைபவர்களாக (தூரமாகக் கூடியவர்களாக) இல்லை. (நரகத்திலிலிருந்து அவர்களால் தப்ப முடியாது.)
                                                                        இன்னும் (நபியே!) கூலி நாள் (விசாரனை நாள், தீர்ப்பு நாள்) என்ன(வென்று) உமக்கு அறிவித்தது எது?
                                                                        பிறகு, கூலி நாள் என்ன(வென்று) உமக்கு அறிவித்தது எது?
                                                                        ஓர் ஆன்மா, (வேறு) ஓர் ஆன்மாவுக்கு எதையும் உரிமை பெறாத நாள் (அது). அதிகாரம் அந்நாளில் அல்லாஹ்விற்கே!