70. ஆதமுடைய சந்ததியை நிச்சயமாக நாம் கண்ணியப்படுத்தினோம். கரையில் (வாகனங்கள் மீதும்) கடலில் (கப்பல்கள் மீதும்) நாம்தான் அவர்களைப் பயணிக்க வைக்கிறோம். நல்ல உணவுகளையும் நாமே அவர்களுக்கு அளிக்கிறோம். நாம் படைத்த (மற்ற உயிரினங்களில்) பலவற்றின் மீது (பொதுவாக) நாம் அவர்களை மிக மிக மேன்மையாக்கி வைத்திருக்கிறோம்.
الترجمة التاميلية
۞وَلَقَدۡ كَرَّمۡنَا بَنِيٓ ءَادَمَ وَحَمَلۡنَٰهُمۡ فِي ٱلۡبَرِّ وَٱلۡبَحۡرِ وَرَزَقۡنَٰهُم مِّنَ ٱلطَّيِّبَٰتِ وَفَضَّلۡنَٰهُمۡ عَلَىٰ كَثِيرٖ مِّمَّنۡ خَلَقۡنَا تَفۡضِيلٗا
நிச்சயமாக, நாம் ஆதமுடைய சந்ததியைக் கண்ணியப்படுத்தினோம்; இன்னும், கடலிலும், கறையிலும் அவர்களைச் சுமந்து, அவர்களுக்காக நல்ல உணவு(ம் மற்றும்) பொருட்களையும் அளித்து, நாம் படைத்துள்ள (படைப்புகள்) பலவற்றையும் விட அவர்களை (தகுதியால்) மேன்மைப் படுத்தினோம்.
Jan Trust Foundation - Tamil translation
திட்டவட்டமாக ஆதமுடைய சந்ததிகளை நாம் கண்ணியப்படுத்தினோம். கரையி(ல் பல விதமான வாகனங்களி)லும் கடலி(ல் கப்பலி)லும் நாம் அவர்களை வாகனிக்கச் செய்தோம். நல்லவற்றிலிருந்து நாம் அவர்களுக்கு உணவளித்தோம். நாம் படைத்த அதிகமான (படைப்புகள் பல)வற்றை விட நாம் அவர்களை முற்றிலும் மேன்மைப்படுத்தினோம்.
الترجمة التاميلية - عمر شريف