73. நாம் உமக்கு வஹ்யி மூலம் அறிவித்ததை நீர் விட்டு(விட்டு) அதல்லாததை நம்மீது நீர் பொய்யாகக் கற்பனை செய்து கூறும்படி உம்மை அவர்கள் திருப்பிவிடவே இருந்தார்கள். (அவ்வாறு நீர் செய்திருந்தால்) உம்மை அவர்கள் தங்கள் நண்பராகவும் எடுத்துக் கொண்டிருப்பார்கள்.
الترجمة التاميلية
وَإِن كَادُواْ لَيَفۡتِنُونَكَ عَنِ ٱلَّذِيٓ أَوۡحَيۡنَآ إِلَيۡكَ لِتَفۡتَرِيَ عَلَيۡنَا غَيۡرَهُۥۖ وَإِذٗا لَّٱتَّخَذُوكَ خَلِيلٗا
(நபியே!) இன்னும் நாம் உமக்கு வஹீ மூலம் அறிவித்தோமே அதை விட்டும், அதல்லாததை நம்மீது நீர் இட்டுக்கட்டிக் கூறும்படி உம்மைத் திருப்பிவிடவே அவர்கள் முனைந்தார்கள்; (அவ்வாறு நீர் செய்திருந்தால்) உம்மை தம் உற்ற நண்பராகவும் அப்போது எடுத்துக் கொண்டிருப்பார்கள்.
Jan Trust Foundation - Tamil translation
நாம் உமக்கு வஹ்யி அறிவித்ததை விட்டு (வேறு ஒன்றின் பக்கம்) உம்மை அவர்கள் திருப்பிவிட நிச்சயமாக நெருங்கிவிட்டனர், ஏனெனில், நீர் (வஹ்யில் அறிவிக்கப்பட்ட) அது அல்லாததை (பொய்யாக) நம் மீது இட்டுக் கட்டுவதற்காக. அப்போது அவர்கள் உம்மை உற்ற நண்பராக எடுத்துக் கொண்டிருப்பார்கள்.
الترجمة التاميلية - عمر شريف