99. அவர்களை அல்லாஹ் மன்னித்து விடக்கூடும். ஏனென்றால், அல்லாஹ் மிக மன்னிப்பவனாக, பிழை பொறுப்பவனாக இருக்கிறான்.
الترجمة التاميلية
فَأُوْلَـٰٓئِكَ عَسَى ٱللَّهُ أَن يَعۡفُوَ عَنۡهُمۡۚ وَكَانَ ٱللَّهُ عَفُوًّا غَفُورٗا
அத்தகையோரை அல்லாஹ் மன்னிக்கப் போதுமானவன்;. ஏனெனில் அல்லாஹ் மிகவும் மன்னிப்பவனாகவும், பிழை பொறுப்பவனாகவும் இருக்கின்றான்.
Jan Trust Foundation - Tamil translation
ஆண்கள், பெண்கள், சிறுவர்கள் ஆகியோரில் பலவீனர்களைத் தவிர. (இவர்கள் நரகவாசிகள் அல்லர்) இவர்கள் (ஹிஜ்ரா புறப்படுவதற்கு தேவையான) ஓர் ஆற்றலை(யும் பெற) இயலமாட்டார்கள். இன்னும் இவர்கள், (தப்பித்துச் செல்ல) ஒரு வழியையும் காணமாட்டார்கள். அல்லாஹ் இவர்களை மன்னிக்கக்கூடும். அல்லாஹ் மன்னிப்பாளனாக பாவங்களை மறைப்பவனாக இருக்கிறான்.
الترجمة التاميلية - عمر شريف