الترجمة التاميلية - عمر شريف இலிருந்து التاميلية மொழியில் சூரா يوسف இன் மொழிபெயர்ப்பு
Verse 1
ﮢﮣﮤﮥﮦﮧ
ﮨ
அலிஃப் லாம் றா. இவை தெளிவான வேதத்தின் வசனங்களாகும்.
Verse 2
ﮩﮪﮫﮬﮭﮮ
ﮯ
நிச்சயமாக நாம் இதை நீங்கள் சிந்தித்து புரிவதற்காக அரபி(யில் ஓதப்படும், கற்பிக்கப்படும்) குர்ஆனாக இறக்கினோம்.
Verse 3
(நபியே!) இந்த குர்ஆனை உமக்கு நாம் வஹ்யி அறிவித்ததன் மூலம் சரித்திரங்களில் மிக அழகானதை உமக்கு விவரிக்கிறோம். நிச்சயமாக இதற்கு முன்னர் நீர் அறியாதவர்களில் இருந்தீர்.
Verse 4
யூஸுஃப் தன் தந்தைக்கு “என் தந்தையே! நிச்சயமாக நான் பதினொரு நட்சத்திரங்களையும், சூரியனையும், சந்திரனையும் கனவில் கண்டேன். எனக்குச் சிரம் பணியக்கூடியவையாக அவற்றை நான் கனவில் கண்டேன்” என்று கூறிய சமயத்தை நினைவு கூருவீராக.
Verse 5
“என்னருமை மகனே! உன் கனவை உன் சகோதரர்களிடம் விவரிக்காதே. அவர்கள் உனக்கொரு சூழ்ச்சியை சூழ்ச்சி செய்வார்கள். நிச்சயமாக ஷைத்தான் மனிதனுக்கு பகிரங்கமான எதிரியாவான்” என்று (யஅகூப்) கூறினார்.
Verse 6
“இவ்வாறே உன் இறைவன் உன்னைத் தேர்ந்தெடுப்பான். (கனவைப் பற்றிய) பேச்சுகளின் (முடிவான) விளக்கத்திலிருந்து உனக்குக் கற்பிப்பான். உம்மீதும், யஅகூபின் (மற்ற) கிளையார் மீதும் அவன்தன் அருளை முழுமையாக்குவான், முன்னர் உன் இரு பாட்டன்களான இப்றாஹீம், இஸ்ஹாக் மீது அதை முழுமைப்படுத்தியது போன்று. நிச்சயமாக உன் இறைவன் நன்கறிந்தவன், மகா ஞானவான்.”
Verse 7
யூஸுஃப் இன்னும் அவரது சகோதரர்களில் (அவர்களைப் பற்றி) வினவுகின்றவர்களுக்கு (பல) அத்தாட்சிகள் திட்டவட்டமாக இருக்கின்றன.
Verse 8
நாம் ஒரு (பெரும்) கூட்டமாக இருக்க, திட்டமாக யூஸுஃபும், அவருடைய சகோதரரும் நம் தந்தைக்கு நம்மைவிட அதிகப் பிரியமுள்ளவர்கள் ஆவர். (இதில்) நிச்சயமாக நம் தந்தை பகிரங்கமான தவறில்தான் இருக்கிறார்” என்று கூறிய சமயத்தை நினைவு கூருவீராக.
Verse 9
“யூஸுஃபைக் கொல்லுங்கள். அல்லது பூமியில் (எங்கேனும்) அவரை எறியுங்கள். (அதன் பின்) உங்கள் தந்தையின் முகம் உங்களுக்கு (மட்டும்) தனியாகிவிடும், இதன் பின்னர், நீங்கள் (திருந்தி) நல்ல மக்களாக மாறிவிடுவீர்கள்.”
Verse 10
அவர்களில் கூறுபவர் ஒருவர், “யூஸுஃபை கொல்லாதீர்கள். நீங்கள் (அவருக்கு கெடுதல்) செய்பவர்களாக இருந்தால் கிணற்றின் ஆழத்தில் அவரைப் போ(ட்டு வி)டுங்கள். வழிப்போக்கர்களில் சிலர் அவரை எடுத்துக் கொள்வார்கள்”என்று கூறினார்.
Verse 11
“எங்கள் தந்தையே! உமக்கு என்ன நேர்ந்தது? யூஸுஃப் விஷயத்தில் நீங்கள் எங்களை நம்புவதில்லை? நிச்சயமாக நாங்கள் அவருக்கு நன்மையை நாடுபவர்கள்தான்” என்று கூறினர்.
Verse 12
“நாளை அவரை எங்களுடன் அனுப்புவீராக. அவர் மகிழ்ச்சியாக இருப்பார், விளையாடுவார். நிச்சயமாக நாங்கள் அவரை பாதுகாப்பவர்கள்தான்.”
Verse 13
“நிச்சயமாக நான், நீங்கள் அவரை அழைத்துச் செல்வது எனக்கு கவலையளிக்கும். நீங்கள் (விளையாட்டில்) அவரை விட்டு கவனமற்றவர்களாக இருக்க, ஓநாய் அவரை தின்றுவிடுவதைப் பயப்படுகிறேன்”என்று கூறினார்.
Verse 14
“நாங்கள் ஒரு கூட்டமாக இருக்க, அவரை ஓநாய் தின்றால் நிச்சயமாக நாங்கள் அப்போது நஷ்டவாளிகள்தான்”என்று கூறினர்.
Verse 15
அவர்கள் அவரைக் கொண்டு சென்றபோது, அவரை கிணற்றின் ஆழத்தில் ஆக்கி விட அவர்கள் ஒன்று சேர்ந்து முடிவு செய்தனர். “அவர்களுடைய இந்த காரியத்தை (பின்னர்) அவர்களுக்கு நிச்சயமாக அறிவிப்பீர், (இதை இப்போது) அவர்கள் உணர மாட்டார்கள்”என்று அவருக்கு வஹ்யி அறிவித்தோம்.
Verse 16
ﭤﭥﭦﭧ
ﭨ
அன்று மாலை சாய்ந்த பின், அவர்கள் தம் தந்தையிடம் அழுதவர்களாக வந்தனர்.
Verse 17
“எங்கள் தந்தையே! நிச்சயமாக நாங்கள் எங்கள் பொருளிடம் யூஸுஃபை விட்டுவிட்டு நாங்கள் அம்பெறிந்தவர்களாக சென்றோம். (அப்போது) அவரை ஓநாய் தின்றது. நாங்கள் (சந்தேகப்பட முடியாத) உண்மையாளர்களாக இருந்தாலும் எங்களை நீர் நம்புபவராக இல்லை”என்று கூறினார்கள்.
Verse 18
அவருடைய சட்டையில் ஒரு பொய்யான இரத்தத்தை (தடவி)க் கொண்டு வந்தனர். “மாறாக, உங்கள் மனங்கள் ஒரு (தீய) காரியத்தை உங்களுக்கு அலங்கரித்தன. (அதை நீங்கள் செய்து விட்டீர்கள்.) ஆகவே, அழகிய பொறுமை (தான் நல்லது). நீங்கள் வருணிப்பவை மீது அல்லாஹ்வே உதவி தேடப்படுபவன்”என்று (யஅகூபு) கூறினார்.
Verse 19
ஒரு பயணக் கூட்டம் வந்தது. அவர்கள் தங்களில் நீர் கொண்டு வருபவரை அனுப்பினார்கள். அவர் (தன்) வாளியை(க் கிணற்றில்) இறக்கினார். (அதைப் பிடித்து யூஸுஃப் மேலே வரவே,) “ஆ... நற்செய்தி! இதோ ஒரு (அழகிய) சிறுவர்! என்று கூறினார். (அவரை தங்கள்) வர்த்தகப் பொருளாக (ஆக்கிக் கொள்ளக் கருதி) அவரை மறைத்தார்கள். அல்லாஹ் அவர்கள் செய்வதை நன்கறிபவன்.
Verse 20
(திரும்பி வந்த யூஸுஃபுடைய சகோதரர்கள்) எண்ணப்பட்ட (சில) திர்ஹம்களுக்கு பகரமாக, குறைவான ஒரு தொகைக்கு அவரை (பயணக் கூட்டத்தாரிடம்) விற்றார்கள். (அவர்கள்) அவர் விஷயத்தில் ஆசையற்றவர்களாக இருந்தனர்.
Verse 21
எகிப்தில் அவரை விலைக்கு வாங்கியவர், “நீ இவரின் தங்குமிடத்தை கண்ணியப்படுத்து; (கண்ணியமாக தங்கவை) அவர் நமக்கு பலனளிக்கலாம்; அல்லது அவரை நாம் (நமக்கு) ஒரு பிள்ளையாக ஆக்கிக் கொள்ளலாம்” என்று தன் மனைவிக்கு கூறினார். இவ்வாறு தான் பூமியில் யூஸுஃபுக்கு ஆதிக்கமளித்தோம். (கனவு பற்றிய) செய்திகளின் விளக்கத்திலிருந்து (நாம் நாடியதை) அவருக்குக் கற்பிப்பதற்காகவும் (அவருக்கு ஆதிக்கமளித்தோம்). அல்லாஹ் தன் காரியத்தில் மிகைத்தவன். எனினும், மக்களில் அதிகமானவர்கள் (இதை) அறிய மாட்டார்கள்.
Verse 22
அவர் (தன் வாலிபத்தின்) முழு ஆற்றல்களை அடைந்தபோது, நாம் அவருக்கு ஞானத்தையும், (-புரிகின்ற திறமையையும்) கல்வியையும் கொடுத்தோம். நல்லறம் புரிபவர்களுக்கு இவ்வாறுதான் நாம் கூலி தருவோம்.
Verse 23
அவர் எவள் வீட்டில் இருந்தாரோ அவள் (எல்லாக்) கதவுகளையும் மூடிவிட்டு அவரை (தன்) விருப்பத்திற்கு (பலவந்தமாக) அழைத்து “வருவீராக”என்று கூறினாள். “அல்லாஹ்வின் பாதுகாப்பை(க் கோருகிறேன்)! நிச்சயமாக அவர் என் எஜமானர், என் தங்குமிடத்தை அழகுபடுத்தினார். நிச்சயமாக அநியாயக்காரர்கள் வெற்றி பெற மாட்டார்கள்” என்று கூறினார்.
Verse 24
உறுதியாக, அவள் அவரை நாடி விட்டாள்; (இறுதியாக,) அவரும் அவளை நாடினார். தன் இறைவனுடைய ஆதாரத்தை அவர் பார்த்திருக்கவில்லையெனில்... (தவறு நடந்திருக்கும்). இவ்வாறுதான், கெட்டதையும் மானக்கேடானதையும் அவரை விட்டு நாம் திருப்புவதற்காக (நாம் ஆதாரத்தை காட்டுவோம்). நிச்சயமாக, அவர் தூய்மையாக்கப்பட்ட நம் அடியார்களில் இருக்கிறார்.
Verse 25
இருவரும், வாசலிற்கு முந்தினர். அவள் அவருடைய சட்டையை பின்புறத்தில் கிழித்தால். வாசலில் அவளுடைய கணவரை இருவரும் பெற்றனர்.“உம் மனைவிக்கு ஒரு கெட்டதை நாடியவனின் தண்டனை, அவன் சிறையிடப்படுவது அல்லது (அவனுக்கு) துன்புறுத்தக்கூடிய ஒரு வேதனை (கொடுக்கப்படுவது) தவிர வேறில்லை”என்று கூறினாள்.
Verse 26
(யூஸுஃப் அதை மறுத்து) “அவள்தான் என்னை (பலவந்தமாக) தன் விருப்பத்திற்கு அழைத்தாள்”என்று கூறினார். அவளுடைய குடும்பத்திலிருந்து ஒரு சாட்சியாளர் சாட்சி கூறினார்: அவருடைய சட்டை முன் புறத்திலிருந்து கிழிக்கப்பட்டிருந்தால் அவள் உண்மை கூறினாள்; அவர் பொய்யர்களில் உள்ளவர்!
Verse 27
அவருடைய சட்டை பின் புறத்திலிருந்து கிழிக்கப்பட்டதாக இருந்தால், அவள் பொய் கூறினாள்; அவர் உண்மையாளர்களில் உள்ளவர்.”
Verse 28
அவருடைய சட்டை பின்புறத்திலிருந்து கிழிக்கப்பட்டதாக இருப்பதை (அவளுடைய கணவர்) பார்த்தபோது “நிச்சயமாக இது (பெண்களாகிய) உங்கள் சதியிலிருந்து உள்ளதுதான்; நிச்சயமாக உங்கள் சதி மகத்தானது”என்று கூறினார்.
Verse 29
“யூஸுஃபே! நீர் இதை விட்டுப் புறக்கணிப்பீராக! (பிறகு தன் மனைவியை நோக்கி) “நீ உன் பாவத்திற்கு மன்னிப்புத் தேடு, நிச்சயமாக நீ தவறிழைத்தவர்களில் இருக்கிறாய்”என்று கூறினார்.
Verse 30
நகரத்திலுள்ள பெண்கள் “அதிபரின் மனைவி தன் (அடிமையான) வாலிபனைத் தன் விருப்பத்திற்கு (பலவந்தமாக) அழைக்கிறாள். அவர் அவளை அன்பால் ஈர்த்து விட்டார்! நிச்சயமாக நாம் அவளை தெளிவானதொரு வழிகேட்டில் காண்கிறோம்”என்று கூறினர்.
Verse 31
அவர்களின் சூழ்ச்சியை அவள் செவியுற்றபோது, (அப்பெண்களை அழைத்து வர) அவர்களிடம் (ஓர் அழைப்பாளரை) அனுப்பினாள். அவர்களுக்கு ஒரு விருந்தை ஏற்பாடு செய்தாள். அவர்களில் ஒவ்வொருவருக்கும் (பழம் இன்னும்) ஒரு கத்தியைக் கொடுத்து, (யூஸுஃபே!) அவர்கள் முன் வெளியேருவீராக! எனக் கூறினாள். அவரை (அவர்கள்) பார்த்தபோது அவரை மிக உயர்வாக எண்ணினர். (பழத்தை விட்டுவிட்டு) தங்கள் கை(விரல்)களை அறுத்தனர். “அல்லாஹ் பாதுகாப்பானாக! இவர் மனிதராக இல்லை! இவர் (அழகான) கண்ணியமான ஒரு வானவரே தவிர வேறில்லை”என்று கூறினர்.
Verse 32
“நீங்கள் என்னை எவர் விஷயத்தில் பழித்தீர்களோ அவர்தான் இவர். திட்டவட்டமாக நான் அவரை என் விருப்பத்திற்கு (பலவந்தமாக) அழைத்தேன். அவர் (தன்னை) காத்துக் கொண்டார். அவருக்கு நான் ஏவுவதை அவர் செய்யவில்லையெனில் நிச்சயமாக அவர் சிறையிலிடப்படுவார், நிச்சயமாக இழிவானவர்களில் அவர் ஆகுவார்”என்று கூறினாள்.
Verse 33
“என் இறைவா! அவர்கள் என்னை எதற்கு அழைக்கிறார்களோ அதைவிட (நான்) சிறை(யிலிடப்படுவது) எனக்கு மிக விருப்பமானது. நீ என்னை விட்டு அவர்களின் சூழ்ச்சியை திருப்பவில்லையெனில் நான் அவர்கள் பக்கம் இச்சைகொள்வேன்; அறிவீனர்களில் ஆகிவிடுவேன்”என்று கூறினார்.
Verse 34
அவருடைய இறைவன் அவருக்கு பதிலளித்தான். ஆகவே, அவர்களின் சூழ்ச்சியை அவரைவிட்டுத் திருப்பினான். நிச்சயமாக அவன்தான் நன்கு செவியுறுபவன், நன்கறிந்தவன்.
Verse 35
பிறகு, (யூஸுஃப் நிரபராதி என்பதின்) அத்தாட்சிகளை அவர்கள் பார்த்த பின்னரும் அவர்கள் ஒரு (குறிப்பிட்ட) காலம் வரை நிச்சயமாக அவரை சிறையில் அடைக்கவேண்டும் என அவர்களுக்குத் தோன்றியது.
Verse 36
இரு வாலிபர்களும் அவருடன் சிறையில் நுழைந்தனர். அவ்விருவரில் ஒருவன் “நிச்சயமாக நான் மதுவை பிழிவதாக என்னை கனவு கண்டேன்” என்று கூறினான். மற்றவன் “என் தலை மேல் நான் ரொட்டியைச் சுமக்க, அதிலிருந்து பறவைகள் புசிப்பதாக நிச்சயமாக நான் என்னை கனவு கண்டேன்”என்று கூறினான். (பிறகு இருவரும்) “இதன் விளக்கத்தை எங்களுக்கு அறிவிப்பீராக! நிச்சயமாக நாங்கள் உம்மை நல்லறம் புரிபவர்களில் காண்கிறோம்” (என்று கூறினார்கள்).
Verse 37
“நீங்கள் (இருவரும்) உணவளிக்கப்படுகிற உணவு உங்களிடம் வராது, அது உங்களிடம் வருவதற்கு முன்னர் அதன் விளக்கத்தை நான் உங்கள் இருவருக்கும் அறிவித்தே தவிர. இது என் இறைவன் எனக்கு கற்பித்ததிலிருந்து (நான் கூறுவதாகும்). அல்லாஹ்வை நம்பிக்கை கொள்ளாத மக்களுடைய மார்க்கத்தை நிச்சயமாக நான் விட்டு விட்டேன். அவர்கள் மறுமையையும் நிராகரிக்கின்றார்கள்.
Verse 38
என் மூதாதைகளாகிய இப்றாஹீம், இஸ்ஹாக், யஅகூப் உடைய மார்க்கத்தை பின்பற்றினேன். அல்லாஹ்விற்கு எதையும் நாங்கள் இணைவைப்பது எங்களுக்குத் தகுமானதல்ல. இது எங்கள் மீதும் (மற்ற) மக்கள் மீதும் அல்லாஹ்வின் அருளிலிருந்து உள்ளதாகும். எனினும், மக்களில் அதிகமானவர்கள், (அல்லாஹ்விற்கு) நன்றி செலுத்த மாட்டார்கள்.
Verse 39
என் (இரு) சிறைத் தோழர்களே! (பலவீனமான) பிரிந்துள்ள (பல) தெய்வங்கள் மேலானவர்களா? அல்லது ஒருவனான, அடக்கி ஆளுபவனான அல்லாஹ்வா?
Verse 40
நீங்களும் உங்கள் மூதாதைகளும் பெயர் சூட்டிய பெயர்களைத் தவிர அவனை அன்றி (வேறு எதையும்) நீங்கள் வணங்குவதில்லை. அல்லாஹ் இவற்றுக்கு எவ்வித ஆதாரத்தையும் இறக்கவில்லை. அதிகாரம் அல்லாஹ்விற்கே தவிர (வேறு எவருக்கும்) இல்லை. அவனைத் தவிர (மற்றவற்றை) நிச்சயமாக வணங்காதீர்கள் என்று அவன் கட்டளையிட்டான். இதுதான் நேரான மார்க்கம். எனினும், மக்களில் அதிகமானவர்கள் (இதை) அறிய மாட்டார்கள்.”
Verse 41
“என் இரு சிறைத் தோழர்களே! “ஆக, உங்களில் ஒருவன் தன் எஜமானனுக்கு மதுவை புகட்டுவான். ஆக, மற்றவன் கழுமரத்தில் அறையப்படுவான். அவனுடைய தலையில் பறவைகள் (கொத்தித்) தின்னும். நீங்கள் விளக்கம் கேட்டது விதிக்கப்பட்(டு விட்)டது.
Verse 42
அவ்விருவரில் நிச்சயமாக எவர் தப்பிப்பவர் என்று தான் எண்ணினாரோ அவரிடம், நீ உன் எஜமானனிடம் என்னைப் பற்றி கூறு! என்று கூறினார். (யூசுஃப்) தன் இறைவனை நினைவு கூருவதை ஷைத்தான் அவருக்கு மறக்கடித்தான். ஆகவே, அவர் சிறையில் (மேலும்) சில ஆண்டுகள் தங்கினார்.
Verse 43
(எகிப்தின்) அரசர் கூறினார்: “கொழுத்த ஏழு பசுக்களை, அவற்றை இளைத்த ஏழு பசுக்கள் புசிப்பதாகவும், பசுமையான ஏழு கதிர்களையும் காய்ந்த வேறு (கதிர்களையும்) நிச்சயமாக என் கனவில் கண்டேன். என் பிரமுகர்களே! நீங்கள் கனவுக்கு வியாக்கியானம் கூறுபவர்களாக இருந்தீர்களானால் என் கனவிற்கு எனக்கு விளக்கம் தாருங்கள்,”
Verse 44
“(இவை) பொய்யான (குழம்பிய) கனவுகள். (வீணான) கனவுகளுக்குரிய விளக்கத்தை நாங்கள் அறிந்தவர்களாக இல்லை”என்று கூறினார்கள்.
Verse 45
அவ்விருவரில் தப்பித்தவன் கூறினான்: சில ஆண்டுகளுக்குப் பின்னர் (யூஸுஃபை) அவன் நினைவு கூர்ந்தான் “நான் அவருடைய (கனவின்) விளக்கத்தை உங்களுக்கு அறிவிப்பேன். ஆகவே, என்னை (சிறையிலுள்ள யூஸுஃபிடம்) அனுப்புங்கள்.”
Verse 46
யூஸுஃபே! உண்மையாளரே! (அரசர் கனவில் பார்த்த) கொழுத்த ஏழு பசுக்கள் _ அவற்றை இளைத்த ஏழு பசுக்கள் புசிக்கின்றன _ (அது) பற்றியும் பசுமையான ஏழு கதிர்கள், காய்ந்த மற்ற (ஏழு) கதிர்கள் பற்றியும் எங்களுக்கு விளக்கம் தருவீராக! நான் மக்களிடம் திரும்பி செல்லவேண்டும். அவர்கள் (இதன் விளக்கத்தை) அறியவேண்டும்.
Verse 47
(யூஸுஃப்) கூறினார்: “வழக்கமாக ஏழு ஆண்டுகள் நீங்கள் விவசாயம் செய்வீர்கள். நீங்கள் புசிப்பதற்குத் தேவையான கொஞ்சத்தைத் தவிர நீங்கள் அறுவடை செய்ததை அதன் கதிரிலேயே விட்டு விடுங்கள்.
Verse 48
அதற்குப் பின்னர், கடினமான (பஞ்சமுடைய) ஏழு (ஆண்டுகள்) வரும். நீங்கள் கதிர்களில் பத்திரப்படுத்தியதில் கொஞ்சத்தைத் தவிர நீங்கள் அவற்றுக்காக முற்படுத்தியிருந்தவற்றை அவை தின்னு (அழித்து விடு)ம்.
Verse 49
அதற்குப் பின்னர் ஓர் ஆண்டு வரும். அதில் மக்கள் மழை பொழியப்படுவார்கள். (ஒலிவம், திராட்சை ஆகியவற்றை) பிழிவார்கள்.
Verse 50
(இவ்விளக்கத்தை அரசரிடம் அறிவிக்கவே) அரசர் “(இதைக் கூறிய) அவரை என்னிடம் கொண்டு வாருங்கள்” எனக் கூறினார். (அழைத்துச் செல்ல) தூதர் அவரிடம் வந்தபோது அவர் (தூதருடன் செல்ல மறுத்து) “நீ உன் எஜமானனிடம் திரும்பிச் செல். தங்கள் கை(விரல்)களை வெட்டிய பெண்களின் (உண்மை) விஷயமென்ன? என்று அவரைக் கேள். நிச்சயமாக என் இறைவன் அவர்களின் சூழ்ச்சியை நன்கறிந்தவன்”என்று கூறினார்.
Verse 51
(அரசர் அப்பெண்களை அழைத்து) “நீங்கள் யூஸுஃபை உங்கள் விருப்பத்திற்கு அழைத்த போது உங்கள் நிலை என்ன?” என்று கேட்டார். “அல்லாஹ் பாதுகாப்பானாக. நாங்கள் அவரிடத்தில் ஒரு தீங்கையும் அறியவில்லை”என்று (அப்பெண்கள்) கூறினர். அதிபரின் மனைவியோ “இப்போது உண்மை வெளிப்பட்டு விட்டது. நான்தான் அவரை (நிர்பந்தமாக) என் விருப்பத்திற்கு அழைத்தேன். நிச்சயமாக அவர் உண்மையாளர்களில் உள்ளவர்”என்று கூறினாள்.
Verse 52
“அது, நிச்சயமாக நான் (என் எஜமானர்) மறைவில் (இருந்த போது) அவருக்கு துரோகம் செய்யவில்லை என்பதை அவர் அறிவதற்காகவும், நிச்சயமாக அல்லாஹ் துரோகிகளின் சூழ்ச்சியை நல்வழி படுத்தமாட்டான் என்பதற்காகவும்தான் (இந்த விஷயங்களை விசாரிக்கும்படி கூறி தூதரை திருப்பி அனுப்பினேன் என்று யூஸுஃப் கூறினார்).”
Verse 53
“நான் என் ஆன்மாவை தூய்மைப்படுத்த மாட்டேன். (தவறுகளை விட்டு நீங்கியது என்று உயர்வாகப் பேசமாட்டேன்.) என் இறைவன் அருள் புரிந்ததைத் தவிர (மற்ற) ஆன்மா(க்கள் அனைத்தும் மனிதனை) பாவத்திற்கு அதிகம் தூண்டக்கூடியதே. நிச்சயமாக என் இறைவன் மகா மன்னிப்பாளன், பெரும் கருணையாளன்”(என்று யூஸுஃப் கூறினார்).
Verse 54
“அவரை என்னிடம் கொண்டு வாருங்கள்! நான் அவரை எனக்கென மட்டும் பிரத்தியேகமாக ஆக்கிக்கொள்வேன்”என்று அரசர் கூறினார். (அரசர்) அவருடன் பேசியபோது, “(யூசுஃபே!) நிச்சயமாக நீர் இன்று நம்மிடம் தகுதியுடையவர், நம்பிக்கையாளர்”என்று கூறினார்.
Verse 55
“நாட்டின் கஜானாக்கள் மீது (பொறுப்பாளராக) என்னை ஆக்குவீராக. நிச்சயமாக நான் பாதுகாப்பவன், நன்கறிந்தவன்”என்று (யூசுஃப்) கூறினார்.
Verse 56
இவ்வாறே யூஸுஃபுக்கு அந்நாட்டில் வசதியளித்தோம் அவர் தான் நாடிய இடத்தில் தங்கிக்கொள்வார். நாம் நாடுகின்றவர்களுக்கு நம் அருளைத் தருகின்றோம். நல்லறம் புரிபவர்களின் கூலியை நாம் வீணாக்க மாட்டோம்.
Verse 57
நம்பிக்கை கொண்டு அல்லாஹ்வை அஞ்சுகின்றவர்களாக இருந்தவர்களுக்கு திட்டமாக மறுமையின் கூலிதான் மேலானது.
Verse 58
யூஸுஃபுடைய சகோதரர்கள் வந்தார்(கள்); அவரிடம் (அவர்கள்) நுழைந்தார்கள். அவர் அவர்களை அறிந்தார். அவர்கள் அவரை அறியாதவர்களாக இருந்தனர்.
Verse 59
(யூஸுஃப்) அவர்களுடைய சாமான்களை அவர்களுக்கு தயார்படுத்திய போது, (“மறுமுறை வரும் சமயம்) உங்கள் தந்தை மூலமாக உங்களுக்குள்ள ஒரு சகோதரனை என்னிடம் கொண்டு வாருங்கள். நிச்சயமாக நான் (உங்களுக்கு) அளவையை முழுமையாக்குவதையும் விருந்தளிப்பவர்களில் நான் சிறந்தவன் என்பதையும் நீங்கள் கவனிக்கவில்லையா? என்று கூறினார்.
Verse 60
நீங்கள் அவரை என்னிடம் கொண்டு வரவில்லையெனில் உங்களுக்கு என்னிடம் அறவே (உணவு) அளவை இல்லை. இன்னும் என்னை நெருங்காதீர்கள்”என்று கூறினார்.
Verse 61
ﯣﯤﯥﯦﯧﯨ
ﯩ
“நாங்கள் அவருடைய தந்தையிடம் அவரை தொடர்ந்து கேட்போம். நிச்சயமாக நாங்கள் (அதை) செய்பவர்கள்தான்”என்று கூறினார்கள்.
Verse 62
(பின்னர் யூஸுஃப்) தன் வாலிபர்களிடம் கூறினார்: “அவர்களுடைய கிரயத்தை அவர்களுடைய மூட்டைகளில் வையுங்கள். அவர்கள் தங்கள் குடும்பத்திடம் திரும்பினால் அதை அவர்கள் அறியவேண்டும், (அதை செலுத்த நம்மிடம்) அவர்கள் திரும்பி வரவேண்டும். (ஆகவே, இப்படி செய்யுங்கள்)” என்று கூறினார்.
Verse 63
அவர்கள் தம் தந்தையிடம் திரும்பியபோது “எங்கள் தந்தையே! (குறிப்பிட்ட அளவைவிட மேல் அதிகம் கொடுக்க) எங்களுக்கு அளவை தடுக்கப்பட்டது. ஆகவே, எங்கள் சகோதரனையும் எங்களுடன் அனுப்புவீராக. நாங்கள் (தானியங்களை) அளந்து (வாங்கி) வருவோம். நிச்சயமாக நாங்கள் அவரை பாதுகாப்பவர்கள்தான்”என்று கூறினர்.
Verse 64
(யஅகூப்,) “முன்னர் இவருடைய சகோதரர் (யூஸுஃப்) விஷயத்தில் நான் உங்களை நம்பியது போல் தவிர இவர் விஷயத்திலும் நான் உங்களை நம்புவதா? அல்லாஹ் மிக மேலான பாதுகாவலன்; அருள் புரிபவர்களில் அவன் மிக அதிகம் அருள் புரிபவன்”என்று கூறினார்.
Verse 65
அவர்கள் தங்கள் பொருளை திறந்தபோது தங்கள் கிரயம் தங்களிடம் திரும்பக் கொடுக்கப்பட்டுள்ளதைக் கண்டு “எங்கள் தந்தையே! நாம் (இதற்கு மேல்) என்ன தேடுகிறோம்? இதோ! நம் கிரய(மு)ம் நம்மிடமே திரும்பக் கொடுக்கப்பட்டுள்ளது. (தர்மமும் கிடைத்துள்ளது. ஆகவே புன்யாமீனையும் அழைத்துச் செல்ல அனுமதி தருவீராக!) நம் குடும்பத்திற்கு (தேவையான) தானியங்களைக் கொண்டு வருவோம். எங்கள் சகோதரனையும் காப்பாற்றுவோம். (அவருக்காக) ஓர் ஒட்டகத்தின் அளவையும் அதிகமாக்குவோம். இது (அவருக்கு) ஓர் இலகுவான அளவைதான்”என்று கூறினர்.
Verse 66
“உங்களுக்கு அழிவு ஏற்பட்டால் தவிர நிச்சயமாக அவரை என்னிடம் நீங்கள் கொண்டு வருவீர்கள் என்று அல்லாஹ்வின் (மீது சத்தியம் செய்து) ஓர் உறுதிமானத்தை நீங்கள் எனக்கு கொடுக்கும் வரை அவரை உங்களுடன் அனுப்பவே மாட்டேன்”என்று கூறினார். அவர்கள் (அவ்வாறு) அவருக்கு தங்கள் உறுதிமானத்தை கொடுக்கவே அவர் “நாம் கூறுவதற்கு அல்லாஹ்வே சாட்சியாளன் (இன்னும் பொறுப்பாளன்) ஆவான்”என்று கூறினார்.
Verse 67
“என் பிள்ளைகளே! (எகிப்தில் நுழையும் போது) ஒரே ஒரு வாசல் வழியாக நுழையாதீர்கள். (தனித் தனியாக) பல்வேறு வாசல்கள் வழியாக நுழையுங்கள். அல்லாஹ்விடமிருந்து (வரக்கூடிய) எதையும் நான் உங்களை விட்டும் தடுக்க முடியாது. அதிகாரம் அல்லாஹ்வுக்கே தவிர (வேறெவருக்கும்) இல்லை. நான் அவன் மீதே நம்பிக்கை வைத்துவிட்டேன். நம்பிக்கை வைப்பவர்கள் அவன் மீதே நம்பிக்கை வைக்கவும்”என்று கூறினார்.
Verse 68
அவர்கள் தங்கள் தந்தை கட்டளையிட்ட முறையில் நுழைந்த போது, யஅகூபுடைய மனதிலிருந்த ஒரு தேவையை அவர் நிறைவேற்றியதைத் தவிர அது அவர்களைவிட்டும் அல்லாஹ்விடமிருந்து (வரக்கூடிய வேறு) எதையும் தடுப்பதாக இல்லை. நிச்சயமாக அவர் நாம் அவருக்கு கற்பித்த காரணத்தால் அறிவுடையவர் ஆவார். ஆனால் மக்களில் அதிகமானவர்கள் அறியமாட்டார்கள்.
Verse 69
அவர்கள் யூஸுஃபிடம் நுழைந்தபோது, அவர் தன் சகோதரனை தன் பக்கம் ஒதுக்கி (அனைத்து)க் கொண்டார். “நிச்சயமாக நான்தான் உம் சகோதரன். ஆகவே, அவர்கள் செய்து கொண்டிருந்ததைப் பற்றி வேதனைப் படாதே!” என்று கூறினார்.
Verse 70
அவர்களுக்கு அவர்களுடைய பொருள்களை அவர் தயார்படுத்தியபோது தன் சகோதரனின் சுமையில் குவளையை வைத்தார். பிறகு, ஒரு அறிவிப்பாளர் “ஓ! பயணக் கூட்டத்தார்களே! நிச்சயமாக நீங்கள் திருடர்கள்தான்”என்று அறிவித்தார்.
Verse 71
ﭡﭢﭣﭤﭥ
ﭦ
இவர்கள் அ(றிவித்த)வர்கள் பக்கம் முன்னோக்கி வந்து “நீங்கள் எதை இழக்கிறீர்கள்?” என்று கூறினர்.
Verse 72
“அரசருடைய குவளையை இழக்கிறோம்”என்று கூறினர், அதைக் கொண்டு வருபவருக்கு ஓர் ஒட்டகைச் சுமை (அளவு தானியம் வெகுமதியாக) உண்டு. நான் அதற்கு பொறுப்பாளன்”(என்று அவர்களில் ஒருவன் கூறினான்).
Verse 73
“அல்லாஹ் மீது சத்தியமாக! நாங்கள் இவ்வூரில் விஷமம் செய்வதற்கு வரவில்லை; நாங்கள் திருடர்களாக இருக்கவில்லை என்பதை நீங்கள் அறிந்திருக்கிறீர்கள்”என்று கூறினார்கள்.
Verse 74
ﮁﮂﮃﮄﮅﮆ
ﮇ
“நீங்கள் (இதில்) பொய்யர்களாக இருந்தால் அ(ந்)த (திருட்டி)ன் தண்டனை என்ன?” என்று கூறினர்.
Verse 75
“அதன் தண்டனை எவருடைய சுமையில் (அது) காணப்படுகிறதோ அவரே அதற்குரிய தண்டனையாவார். இவ்வாறுதான் அநியாயக்காரர்களை நாம் தண்டிப்போம்” என்று கூறினர்.
Verse 76
தன் சகோதரனின் மூட்டைக்கு முன்பாக அவர்களின் மூட்டைகளில் (சோதனையை) ஆரம்பித்தார். பிறகு, தன் சகோதரனின் மூட்டையிலிருந்து அதை வெளிப்படுத்தினார். யூஸுஃபுக்கு இப்படித்தான் காரணம் செய்தோம். அல்லாஹ் நாடினால் தவிர (எகிப்து) அரசரின் சட்டப்படி அவர் தன் சகோதரனை எடுப்பவராக இல்லை. நாம் விரும்புகின்றவர்களை பதவிகளால் உயர்த்துகின்றோம். கல்வியுடைய ஒவ்வொருவருக்கும் மேல் ஒரு கல்விமான் இருக்கிறார்.
Verse 77
அவர் (அதைத்) திருடினால் (யூஸுஃப் என்ற) அவருடைய ஒரு சகோதரன் முன்னர் (இப்படித்தான்) திருடிவிட்டான் என்று கூறினர். யூஸுஃப் அதை தன் உள்ளத்தில் மறைத்தார்; அதை அவர்களுக்கு வெளியாக்கவில்லை _ “நீங்கள் மிகவும் தரம் கெட்டவர்கள். நீங்கள் வருணிப்பதை அல்லாஹ் மிக அறிந்தவன்” _ என்று (தன் மனதில்) கூறினார்.
Verse 78
ஓ அதிபரே! அவருக்கு “(வயதிலும் கண்ணியத்திலும்) பெரியவரான முதியவரான ஒரு தந்தை இருக்கிறார். ஆகவே, இவருடைய இடத்தில் எங்களில் ஒருவரை எடுப்பீராக. நிச்சயமாக நாம் உம்மை நல்லறம் புரிபவர்களில் காண்கிறோம்”என்று கூறினார்கள்.
Verse 79
எவரிடம் நம் பொருளை கண்டோமோ அவரைத் தவிர (மற்றவரை) நாம் பிடிப்பதை விட்டு அல்லாஹ் (எங்களைப்) பாதுகாப்பானாக! அப்படி செய்தால் நிச்சயமாக நாங்கள் அநியாயக்காரர்கள்தான்”என்று (யூசுஃப்) கூறினார்.
Verse 80
அவரிடம் அவர்கள் நம்பிக்கையிழந்தபோது, அவர்கள் ஆலோசித்தவர்களாக விலகினர். அவர்களில் பெரியவர் “திட்டமாக உங்கள் தந்தை உங்களிடம் அல்லாஹ்வின் (பெயரால்) ஓர் உறுதிமானத்தை வாங்கியதையும், முன்னர் நீங்கள் யூஸுஃப் விஷயத்தில் தவறிழைத்ததையும் நீங்கள் அறியவில்லையா? ஆகவே, என் தந்தை எனக்கு அனுமதியளிக்கின்ற வரை அல்லது அல்லாஹ் எனக்கு தீர்ப்பளிக்கின்ற வரை இந்த பூமியை விட்டு நான் நகர மாட்டேன்; அவன் தீர்ப்பளிப்பவர்களில் மிக மேலானவன்”என்று கூறினார்.
Verse 81
“நீங்கள் உங்கள் தந்தையிடம் திரும்பிச் சென்று, எங்கள் தந்தையே! நிச்சயமாக உம் மகன் திருடினான். நாங்கள் அறிந்ததைக் கொண்டே தவிர நாங்கள் சாட்சி பகரவில்லை. மறைவானவற்றை பாதுகாப்பவர்களாக (அறிந்தவர்களாக) நாங்கள் இருக்கவில்லை என்று கூறினர்.
Verse 82
நாங்கள் இருந்த ஊரையும், நாங்கள் வந்த பயணக் கூட்டத்தையும் நீர் கேட்பீராக. நிச்சயமாக நாங்கள் உண்மையாளர்களே!.”
Verse 83
“மாறாக! உங்கள் ஆன்மாக்கள் ஒரு காரியத்தை அலங்கரித்தன. ஆகவே, அழகிய பொறுமை(தான் நல்லது). அல்லாஹ் அவர்கள் அனைவரையும் என்னிடம் கொண்டு வரக்கூடும். நிச்சயமாக அவன்தான் நன்கறிந்தவன், மகா ஞானவான்”என்று கூறினார்.
Verse 84
அவர்களை விட்டு விலகி (திரும்பிச் சென்று), “யூஸுஃப் மீது என் துயரமே!” என்று கூறினார். அவரது இரு கண்களும் கவலையால் (அழுதழுது) வெளுத்தன. அவர் (தன் கோபத்தையும் கவலையையும்) அடக்கிக் கொள்பவர்.
Verse 85
“அல்லாஹ் மீது சத்தியமாக! நீர் அழிவை நெருங்கியவராக ஆகும் வரை அல்லது இறந்தவர்களில் ஆகும் வரை யூஸுஃபை நினைவு கூர்ந்து கொண்டே இருப்பீர்”என்று (கடிந்து) கூறினர்.
Verse 86
“என் துக்கத்தையும் என் கவலையையும் நான் முறையிடுவதெல்லாம் அல்லாஹ்விடம்தான். நீங்கள் அறியாதவற்றை அல்லாஹ்விடம் நான் அறிவேன்”என்று கூறினார்.
Verse 87
என் பிள்ளைகளே! செல்லுங்கள். யூஸுஃபையும், அவரது சகோதரரையும் தேடுங்கள். அல்லாஹ்வின் அருளில் நம்பிக்கை இழக்காதீர்கள்; நிச்சயமாக நிராகரிக்கின்ற மக்களைத் தவிர (மற்றவர்கள்) அல்லாஹ்வின் அருளில் நம்பிக்கை இழக்க மாட்டார்கள்”என்று கூறினார்.
Verse 88
அவர்கள் அவரிடம் (யூஸுஃபிடம்) நுழைந்து, “அதிபரே! எங்களுக்கும் எங்கள் குடும்பத்திற்கும் வறுமை ஏற்பட்டது. ஓர் அற்பப் பொருளை (கிரயமாக இங்கே) நாங்கள் கொண்டு வந்தோம். (அதை ஏற்று) எங்களுக்கு அளவையை முழுமைப்படுத்துவீராக! எங்கள் மீது தானம் புரிவீராக! நிச்சயமாக அல்லாஹ் தர்மசாலிகளுக்கு (நற்)கூலியளிப்பான்”என்று கூறினர்.
Verse 89
“நீங்கள் அறியாதவர்களாக இருந்தபோது யூஸுஃபு, இன்னும் அவருடைய சகோதரருக்கு என்ன செய்தீர்கள் என்பதை நீங்கள் அறிந்தீர்களா?” என்று கூறினார்.
Verse 90
“நிச்சயமாக நீர்தான் யூஸுஃபா?” என்று கூறினர். “நான் யூஸுஃப்! இவர் என் சகோதரர். திட்டமாக அல்லாஹ் எங்கள் மீது அருள்புரிந்தான். நிச்சயமாக எவர் (அல்லாஹ்வை) அஞ்சி, (சோதனையில்) பொறு(த்திரு)ப்பாரோ,நிச்சயமாக அல்லாஹ் நல்லறம் புரிபவர்களின் கூலியை வீணாக்க மாட்டான்”என்று கூறினார்.
Verse 91
“அல்லாஹ்வின் மீது சத்தியமாக! அல்லாஹ் எங்களைவிட உம்மை மேன்மைப் படுத்திவிட்டான். நிச்சயமாக நாங்கள் தவறிழைப்பவர்களாகத்தான் இருந்தோம்”என்று கூறினர்.
Verse 92
(அதற்கவர்) “இன்றைய தினம் உங்கள் மீது அறவே பழிப்பில்லை. அல்லாஹ் உங்களை மன்னிப்பான்! அவன் கருணையாளர்களில் மகா கருணையாளன்”என்று கூறினார்.
Verse 93
“நீங்கள் எனது இந்த சட்டையைக் கொண்டு சென்று, என் தந்தையின் முகத்தில் அதைப் போடுங்கள். அவர் பார்வையுடையவராக வருவார். நீங்கள் உங்கள் குடும்பத்தினர் அனைவரையும் என்னிடம் கொண்டு வாருங்கள்.”
Verse 94
(அவர்களின்) பயணக் கூட்டம் (எகிப்திலிருந்து) பிரியவே, அவர்களின் தந்தை (“இதோ) யூஸுஃபுடைய வாடையை நிச்சயமாக நான் பெறுகிறேன்; என்னை நீங்கள் அறிவீனனாக்காமல் (பழிக்காமல்) இருக்கவேண்டுமே!” என்று கூறினார்.
Verse 95
ﯸﯹﯺﯻﯼﯽ
ﯾ
“அல்லாஹ் மீது சத்தியமாக! நிச்சயமாக நீர் உம் பழைய தவறில்தான் (அப்படியே) இருக்கிறீர்”என்று கூறினர்.
Verse 96
நற்செய்தியாளர் வந்தபோது, அதை அவருடைய முகத்தில் போட்டார். அவர் பார்வையுடையவராக திரும்பினார். “நீங்கள் அறியாதவற்றை அல்லாஹ்விடம் நிச்சயமாக நான் அறிவேன் என்று நான் உங்களுக்குக் கூறவில்லையா?” என்று கூறினார்.
Verse 97
“ஓ எங்கள் தந்தையே! எங்களுக்கு எங்கள் பாவங்களை மன்னிக்கக் கோருவீராக! நிச்சயமாக நாங்கள் தவறிழைப்பவர்களாக இருந்தோம்” என்று கூறினர்.
Verse 98
“நான் என் இறைவனிடம் உங்களுக்காக மன்னிப்புக் கோருவேன். நிச்சயமாக அவன்தான் மகா மன்னிப்பாளன், பெரும் கருணையாளன்”என்று கூறினார்.
Verse 99
அவர்கள் யூஸுஃபிடம் நுழைந்தபோது அவர் தன்பக்கம் தன் பெற்றோரை அரவணைத்தார். இன்னும், “அல்லாஹ் நாடினால்... நீங்கள் அச்சமற்றவர்களாக எகிப்தில் நுழையுங்கள்!” என்று கூறினார்.
அவர் தன் பெற்றோரை அரச கட்டில் மேல் உயர்த்தினார். அவருக்கு (முன்) அவர்கள் சிரம் பணிந்தவர்களாக விழுந்தனர். (யூஸுஃப்) “என் தந்தையே! முன்னர் (நான் கண்ட) என் கனவின் விளக்கம் இது. என் இறைவன் அதை உண்மையாக ஆக்கி விட்டான். சிறையிலிருந்து என்னை அவன் வெளியேற்றியபோதும், எனக்கும், என் சகோதரர்களுக்கு இடையில் ஷைத்தான் பிரிவினையை உண்டு பண்ணிய பின்னர், உங்களை கிராமத்திலிருந்து (என்னிடம்) கொண்டு வந்தபோதும் அவன் எனக்கு நன்மை புரிந்திருக் கிறான். நிச்சயமாக என் இறைவன், தான் நாடியதை செய்வதற்கு மகா நுட்பமானவன். நிச்சயமாக அவன்தான் நன்கறிந்தவன், மகா ஞானவான்.”
Verse 101
“என் இறைவா! திட்டமாக நீ எனக்கு ஆட்சியை தந்தாய். (கனவு சம்பந்தமான) பேச்சுகளின் விளக்கத்தை எனக்கு கற்பித்தாய். வானங்களையும் பூமியையும் படைத்தவனே. நீதான் இம்மையிலும் மறுமையிலும் என் பாதுகாவலன். என்னை முஸ்லிமாக உயிர் கைப்பற்றிக்கொள்! நல்லவர்களுடன் என்னை சேர்த்து விடு!”
Verse 102
(நபியே) இவை மறைவான விஷயங்களில் உள்ளவையாகும். இவற்றை உமக்கு வஹ்யி அறிவிக்கிறோம். அவர்கள் (யூசுஃபை கிணற்றில் போடுவதற்காக) தங்கள் காரியத்தில் ஒருமித்து முடிவெடுத்தபோது நீர் அவர்களிடம் இருக்கவில்லை.
Verse 103
ﰇﰈﰉﰊﰋﰌ
ﰍ
நீர் பேராசைப்பட்டாலும் மக்களில் அதிகமானவர்கள் நம்பிக்கையாளர்களாக இல்லை.
Verse 104
இதற்காக நீர் அவர்களிடம் ஒரு கூலியையும் கேட்பதில்லை. இது அகிலகத்தார்களுக்கு அறிவுரையே தவிர (வேறு) இல்லை.
Verse 105
வானங்கள், பூமியில் எத்தனையோ அத்தாட்சிகள் இருக்கின்றன, அவர்களோ அவற்றை புறக்கணிப்பவர்களாகவே அவற்றின் அருகே (கடந்து) செல்கின்றனர்.
Verse 106
அவர்களில் அதிகமானவர்கள் அவர்கள் இணைவைப்பவர்களாக இருந்தே தவிர அல்லாஹ்வை நம்பிக்கை கொள்ள மாட்டார்கள்.
Verse 107
அல்லாஹ்வின் வேதனையிலிருந்து சூழக்கூடியது அவர்களுக்கு வருவதை அல்லது அவர்கள் அறியாமல் இருக்க திடீரென முடிவு காலம் அவர்களுக்கு வருவதை அவர்கள் அச்சமற்று விட்டனரா? (சூழக்கூடியது: அனைத்தையும் அழிக்கக் கூடியது)
Verse 108
(நபியே!) கூறுவீராக: “இது என் வழி. நானும் என்னைப் பின்பற்றியவர்களும் தெளிவான அறிவின் மீது இருந்து கொண்டு அல்லாஹ்வின் பக்கம் அழைக்கிறோம். அல்லாஹ் மிகப் பரிசுத்தமானவன். நான் இணைவைப்பவர்களில் இல்லை.”
Verse 109
உமக்கு முன்னர் ஊர்வாசிகளில் ஆண்களைத் தவிர (பெண்களையோ வானவர்களையோ தூதர்களாக) நாம் அனுப்பவில்லை. நாம் அ(ந்த ஆட)வர்களுக்கு வஹ்யி அறிவிப்போம். (வேதத்தை மறுக்கும்) அவர்கள் பூமியில் (பயணம்) செல்லவில்லையா? (அப்படி சென்றால்) இவர்களுக்கு முன்னிருந்தவர்களின் முடிவு எப்படி இருந்தது? என்பதைப் பார்ப்பார்கள். மறுமையின் வீடுதான் (அல்லாஹ்வை) அஞ்சியவர்களுக்கு மிக மேலானது. நீங்கள் சிந்தித்துப் புரிய வேண்டாமா?
Verse 110
இறுதியாக, (மக்கள் நம்பிக்கை கொள்வார்கள் என்பதிலிருந்து) நம் தூதர்கள் நிராசையடைய, நிச்சயமாக அவர்கள் (-தூதர்கள்) பொய்ப்பிக்கப்பட்டனர் என்று (மக்கள்) எண்ணியபோது, நம் உதவி அவர்களை (-தூதர்களை) வந்த(டைந்த)து. நாம் நாடுகின்றவர்கள் பாதுகாக்கப்பட்டனர். நம் தண்டனை பாவிகளான சமுதாயத்தை விட்டு (ஒரு போதும்) திருப்பப்படாது.
Verse 111
அறிவுடையவர்களுக்கு இவர்களுடைய சரித்திரங்களில் ஒரு படிப்பினை திட்டவட்டமாக இருக்கிறது. (இது) புனையப்படுகின்ற ஒரு செய்தியாக இருக்கவில்லை. எனினும் தனக்கு முன்னுள்ளதை உண்மைப்படுத்துவதாகவும் எல்லாவற்றையும் விவரிப்பதாகும் நேர்வழியாகவும் நம்பிக்கை கொள்கிற மக்களுக்கு (விசேஷமான) ஓர் அருளாகவும் இருக்கின்றது.பேரன்பாளன் பேரருளாளன் அல்லாஹ்வின் பெயரால்...
تقدم القراءة