10. அவன்தான் மேகத்திலிருந்து உங்களுக்கு மழை பொழியச் செய்கிறான். அதில்தான் நீங்கள் அருந்தக்கூடிய நீரும் இருக்கிறது; அதைக் கொண்டே புற்பூண்டுகளும் (வளர்ந்து) இருக்கின்றன. அதிலே நீங்கள் (உங்கள் கால்நடைகளை) மேய்க்கிறீர்கள்.
الترجمة التاميلية
هُوَ ٱلَّذِيٓ أَنزَلَ مِنَ ٱلسَّمَآءِ مَآءٗۖ لَّكُم مِّنۡهُ شَرَابٞ وَمِنۡهُ شَجَرٞ فِيهِ تُسِيمُونَ
அவனே வானத்திலிருந்து மழையைப் பொழியச் செய்கிறான்; அதிலிருந்து உங்களுக்கு அருந்தும் நீரும் இருக்கிறது அதிலிருந்து (உங்கள் கால்நடைகளை) மேய்ப்பதற்கான மரங்கள் (மற்றும் புற்பூண்டுகளும் உண்டாகி) அதில் இருக்கின்றன.
Jan Trust Foundation - Tamil translation
அவன்தான் மேகத்திலிருந்து மழை நீரை இறக்குபவன். அதில் உங்களுக்கு குடிநீர் இருக்கிறது; அதிலிருந்து மரங்கள் (செடி கொடிகள், புற்பூண்டுகள்) முளைக்கின்றன. அவற்றில் (உங்கள் கால்நடைகளை) நீங்கள் மேய்க்கிறீர்கள்.
الترجمة التاميلية - عمر شريف