48. அல்லாஹ் படைத்திருப்பவற்றில் ஒன்றையுமே இவர்கள் பார்க்க வில்லையா? அவற்றின் நிழல்கள் வலமும் இடமுமாக சாய்வதெல்லாம் அல்லாஹ்வை மிக்க தாழ்மையாகச் சிரம் பணிந்து வணங்குவதுதான்.
الترجمة التاميلية
أَوَلَمۡ يَرَوۡاْ إِلَىٰ مَا خَلَقَ ٱللَّهُ مِن شَيۡءٖ يَتَفَيَّؤُاْ ظِلَٰلُهُۥ عَنِ ٱلۡيَمِينِ وَٱلشَّمَآئِلِ سُجَّدٗا لِّلَّهِ وَهُمۡ دَٰخِرُونَ
அல்லாஹ் படைத்திருக்கும் பொருட்களில் அவர்கள் எதையுமே (உற்றுப்) பார்க்கவில்லையா? அவற்றின் நிழல்கள் வலமும், இடதுமாக (ஸுஜூது செய்தவையாகச்) சாய்கின்றன மேலும் அவை பணிந்து (கீழ்படிதலுடன் இவ்வாறு) அல்லாஹ் வழிபடுகின்றன.
Jan Trust Foundation - Tamil translation
அல்லாஹ் படைத்த ஒரு பொருளையேனும் இவர்கள் பார்க்கவில்லையா? அவற்றின் நிழல்கள் அல்லாஹ்விற்கு சிரம் பணிந்தவையாக வலப்புறமாக இன்னும் இடப்புறமாக சாய்கின்றன. அவை (அவனுக்கு) மிகப் பணிந்தவையாகும்.
الترجمة التاميلية - عمر شريف