91. நீங்கள் அல்லாஹ்வின் பெயரால் செய்யும் உடன்படிக்கையை முழுமையாக நிறைவேற்றுங்கள். அல்லாஹ்வை சாட்சியாக வைத்து சத்தியம் செய்து அதை உறுதிப்படுத்திய பின்னர், அந்தச் சத்தியத்தை நீங்கள் முறித்துவிடாதீர்கள். நிச்சயமாக அல்லாஹ் உங்கள் செயலை நன்கறிவான்.
الترجمة التاميلية
وَأَوۡفُواْ بِعَهۡدِ ٱللَّهِ إِذَا عَٰهَدتُّمۡ وَلَا تَنقُضُواْ ٱلۡأَيۡمَٰنَ بَعۡدَ تَوۡكِيدِهَا وَقَدۡ جَعَلۡتُمُ ٱللَّهَ عَلَيۡكُمۡ كَفِيلًاۚ إِنَّ ٱللَّهَ يَعۡلَمُ مَا تَفۡعَلُونَ
இன்னும், நீங்கள் அல்லாஹ்வின் பெயரால் செய்யும் உடன்படிக்கையை நிறைவேற்றுங்கள்; அல்லாஹ்வை சாட்சியாக வைத்துச் சத்தியம் செய்து, அதனை உறுதிப் படுத்திய பின்னர், அச்சத்தியத்தை முறிக்காதீர்கள் - நிச்சயமாக அல்லாஹ் நீங்கள் செய்வதை நன்கறிவான்.
Jan Trust Foundation - Tamil translation
நீங்கள் ஒப்பந்தம் செய்தால் அல்லாஹ்வின் (பெயரால் செய்யப்பட்ட அந்த) ஒப்பந்தத்தை முழுமையாக நிறைவேற்றுங்கள். சத்தியங்களை அவற்றை உறுதிபடுத்திய பின்பு முறிக்காதீர்கள். அல்லாஹ்வை உங்கள் மீது பொறுப்பாளனாக ஆக்கிவிட்டீர்கள். நிச்சயமாக அல்லாஹ் நீங்கள் செய்வதை அறிவான்.
الترجمة التاميلية - عمر شريف