100. (நபியே!) கூறுவீராக: என் இறைவனின் அருள் பொக்கிஷங்கள் அனைத்திற்கும் நீங்களே சொந்தக்காரர்களாக இருந்தால் அது செலவாகி விடுமோ! எனப் பயந்து (எவருக்கும் எதுவுமே கொடுக்காது) நீங்கள் தடுத்துக் கொள்வீர்கள். மனிதன் பெரும் கஞ்சனாக இருக்கிறான்.
الترجمة التاميلية
قُل لَّوۡ أَنتُمۡ تَمۡلِكُونَ خَزَآئِنَ رَحۡمَةِ رَبِّيٓ إِذٗا لَّأَمۡسَكۡتُمۡ خَشۡيَةَ ٱلۡإِنفَاقِۚ وَكَانَ ٱلۡإِنسَٰنُ قَتُورٗا
"என்னுடைய இறைவனின் (ரஹ்மத்து என்னும்) அருள் பொக்கிஷங்களை நீங்கள் சொந்தப்படுத்திக் கொண்டு இருப்பீர்களானாலும், அவை செலவாகி விடுமோ என்ற பயத்தினால், நீங்கள் (அவற்றைத்) தடுத்துக்கொள்வீர்கள் - மேலும், மனிதன் உலோபியாகவே இருக்கின்றான்" என்று (நபியே!) நீர் கூறும்.
Jan Trust Foundation - Tamil translation
(நபியே!) கூறுவீராக! என் இறைவனுடைய அருளின் பொக்கிஷங்களை நீங்கள் சொந்தமாக்கி வைத்திருந்தால், அப்போது தர்மம் செய்வதை பயந்து (எவருக்கும் கொடுக்காது) தடுத்துக் கொண்டிருப்பீர்கள். மனிதன் மகா கஞ்சனாக இருக்கின்றான்.
الترجمة التاميلية - عمر شريف