36. (நபியே!) நீர் அறியாத ஒரு விஷயத்தை பின் தொடராதீர்! ஏனென்றால், நிச்சயமாக காது, கண், உள்ளம் ஆகிய இவை ஒவ்வொன்றுமே (அவற்றின் செயலைப்பற்றி மறுமையில்) கேள்வி கேட்கப்படும்.
الترجمة التاميلية
وَلَا تَقۡفُ مَا لَيۡسَ لَكَ بِهِۦ عِلۡمٌۚ إِنَّ ٱلسَّمۡعَ وَٱلۡبَصَرَ وَٱلۡفُؤَادَ كُلُّ أُوْلَـٰٓئِكَ كَانَ عَنۡهُ مَسۡـُٔولٗا
எதைப்பற்றி உமக்கு(த் தீர்க்க) ஞானமில்லையோ அதை(ச் செய்யத்) தொடரவேண்டாம்; நிச்சயமாக (மறுமையில்) செவிப்புலனும், பார்வையும், இருதயமும் இவை ஒவ்வொன்றுமே (அதனதன் செயல் பற்றி) கேள்வி கேட்கப்படும்.
Jan Trust Foundation - Tamil translation
உனக்கு எதைப் பற்றி அறிவு இல்லையோ அதைப் பின் தொடராதே! (அதைச் செய்யாதே). நிச்சயமாக செவி, பார்வை, உள்ளம் ஆகிய இவை எல்லாம் அவற்றைப் பற்றி விசாரிக்கப்படுபவையாக இருக்கின்றன.
الترجمة التاميلية - عمر شريف