54. (மனிதர்களே!) உங்களை உங்கள் இறைவன் நன்கறிந்தே இருக்கிறான். அவன் விரும்பினால் உங்களுக்கு அருள்புரிவான் அல்லது அவன் விரும்பினால் உங்களை வேதனை செய்வான். ஆகவே, (நபியே!) நாம் உம்மை அவர்களுக்குப் பொறுப்பாளியாக அனுப்பவில்லை.
الترجمة التاميلية
رَّبُّكُمۡ أَعۡلَمُ بِكُمۡۖ إِن يَشَأۡ يَرۡحَمۡكُمۡ أَوۡ إِن يَشَأۡ يُعَذِّبۡكُمۡۚ وَمَآ أَرۡسَلۡنَٰكَ عَلَيۡهِمۡ وَكِيلٗا
உங்களுடைய இறைவன் உங்களைப் பற்றி நன்கறிவான்; அவன் நாடினால் உங்களுக்கு கிருபை செய்வான்; அல்லது அவன் நாடினால் உங்களை வேதனை செய்வான்; நாம் உம்மை அவர்களுக்கு வகீலாக (பொறுப்பாளியாக) அனுப்பவில்லை.
Jan Trust Foundation - Tamil translation
(மனிதர்களே!) உங்கள் இறைவன் உங்களை மிக அறிந்தவன். அவன் நாடினால் உங்களுக்கு அருள் புரிவான் அல்லது அவன் நாடினால் உங்களை வேதனை செய்வான். (நபியே!) உம்மை அவர்கள் மீது (கண்கானிப்பவராக இன்னும்) பொறுப்பாளராக நாம் அனுப்பவில்லை.
الترجمة التاميلية - عمر شريف