57. இவர்கள் யாரை பிரார்த்தித்து அழைக்கிறார்களோ அவர்களுமோ தங்கள் இறைவனிடம் தங்களில் மிக நெருக்கமானவராக யார் ஆகமுடியும் என்பதற்காக நன்மை செய்வதையே ஆசை வைத்துக்கொண்டும், அவனுடைய அருளையே எதிர்பார்த்து அவனுடைய வேதனைக்குப் பயந்து கொண்டும் இருக்கிறார்கள். ஏனென்றால், நிச்சயமாக உமது இறைவனின் வேதனையோ, மிக மிக பயப்படக்கூடியதே!
الترجمة التاميلية
أُوْلَـٰٓئِكَ ٱلَّذِينَ يَدۡعُونَ يَبۡتَغُونَ إِلَىٰ رَبِّهِمُ ٱلۡوَسِيلَةَ أَيُّهُمۡ أَقۡرَبُ وَيَرۡجُونَ رَحۡمَتَهُۥ وَيَخَافُونَ عَذَابَهُۥٓۚ إِنَّ عَذَابَ رَبِّكَ كَانَ مَحۡذُورٗا
(அல்லாஹ்வையன்றி) இவர்கள் யாரை பிரார்த்திக்கின்றார்களோ அவர்கள், ஏன் அவர்களில் மிகவும் (இறைவனுக்கு) நெருக்கமானவர்கள் கூட தங்கள் இறைவன்பால் (கொண்டு செல்ல) நற்கருமங்களை செய்து கொண்டும் அவனது அருளை எதிர்பார்த்தும் அவனது தண்டனைக்கு அஞ்சியுமே இருக்கின்றனர். நிச்சயமாக உமது இறைவனின் தண்டனை அச்சப்படத் தக்கதாகவே உள்ளது.
Jan Trust Foundation - Tamil translation
(தூதர்கள், இறைநேசர்கள், இன்னும் வானவர்களில்) எவர்களை இவர்கள் பிரார்த்தனையில் அழைக்கின்றார்களோ அவர்கள் தங்கள் இறைவன் பக்கம் தங்களில் மிக நெருங்கியவராக யார் ஆகுவது என்று நன்மையை (அதிகம் செய்ய வழிகளை)த் தேடுகின்றனர்; அவனுடைய அருளை ஆதரவு வைக்கின்றனர்; அவனுடைய வேதனையைப் பயப்படுகின்றனர். நிச்சயமாக உம் இறைவனின் வேதனை பயப்படவேண்டியதாக இருக்கின்றது! (ஆகவே, அவர்களிடம் எப்படி இவர்கள் இரட்சிப்பைத் தேடமுடியும்)
الترجمة التاميلية - عمر شريف