69. அல்லது மற்றொரு தடவை உங்களை கடலில் கொண்டு போய் கடினமான புயல் காற்றை உங்கள் மீது ஏவி, உங்கள் நன்றி கெட்ட தன்மையின் காரணமாக உங்களை மூழ்கடித்துவிட மாட்டான் என்று நீங்கள் அச்சமற்று விட்டீர்களா? அச்சமயம் (நான் உங்களை அழித்து விடாது தடுக்க) என்னைப் பின்தொடர்பவர்கள் ஒருவரையும் நீங்கள் காணமாட்டீர்கள்.
الترجمة التاميلية
أَمۡ أَمِنتُمۡ أَن يُعِيدَكُمۡ فِيهِ تَارَةً أُخۡرَىٰ فَيُرۡسِلَ عَلَيۡكُمۡ قَاصِفٗا مِّنَ ٱلرِّيحِ فَيُغۡرِقَكُم بِمَا كَفَرۡتُمۡ ثُمَّ لَا تَجِدُواْ لَكُمۡ عَلَيۡنَا بِهِۦ تَبِيعٗا
அல்லது, அவன் மீண்டும் ஒரு தடவை அக்கடலில் உங்களை மீளச் செய்து, (எல்லாவற்றையும்) முறித்துத் தள்ளும் புயல் காற்றை உங்கள் மீதனுப்பி, நீங்கள் நிராகரித்ததற்காக உங்களை மூழ்கடித்து விடமாட்டான் என்றும் நீங்கள் அச்சந்தீர்ந்து இருக்கிறீர்களா? (அப்படி நேர்ந்தால் ஏன் இவ்விஷயத்தை அவ்வாறு செய்தோம் என) நம்மைத் தொடர்ந்து உங்களுக்கு(க் கேட்போர்) எவரையும் காணமாட்டீர்கள்.
Jan Trust Foundation - Tamil translation
அல்லது மற்றொரு முறை உங்களை அவன் அதில் மீட்டு (கொண்டு வந்து) உடைத்தெரியும் காற்றை உங்கள் மீது அனுப்பி, (முன்பு புரிந்த அருளுக்கு) நீங்கள் நன்றி கெட்ட(த்தனமாக நடந்து கொண்ட)தால் உங்களை அவன் (கடலில்) மூழ்கடித்து விடுவதை நீங்கள் பயமற்று விட்டீர்களா? (அவ்வாறு செய்தால் அதன்) பிறகு, அதற்காக உங்களுக்கு நம்மிடம் பழிதீர்ப்பவரை காணமாட்டீர்கள்.
الترجمة التاميلية - عمر شريف