76. (நபியே! உமது) ஊரிலிருந்து உமது காலைப்பெயர்த்து அதிலிருந்து உம்மை வெளிப்படுத்திவிடவே அவர்கள் முடிவு கட்டியிருந்தார்கள். அப்படி அவர்கள் செய்திருந்தால் உமக்குப் பின்னர் வெகு சொற்ப நாள்களே தவிர அங்கு அவர்கள் இருந்திருக்க மாட்டார்கள்.
الترجمة التاميلية
وَإِن كَادُواْ لَيَسۡتَفِزُّونَكَ مِنَ ٱلۡأَرۡضِ لِيُخۡرِجُوكَ مِنۡهَاۖ وَإِذٗا لَّا يَلۡبَثُونَ خِلَٰفَكَ إِلَّا قَلِيلٗا
(நபியே!) உம்மை (உம்முடைய) பூமியிலிருந்து அடி பெயரச்செய்து, அதை விட்டும் உம்மை வெளியேற்றிவிட முனைகிறார்கள்; ஆனால் அவர்களோ உமக்குப்பின்னர் சொற்ப நாட்களேயன்றி (அங்கு) தங்கியிருக்க மாட்டார்கள்.
Jan Trust Foundation - Tamil translation
(நபியே! உமது) ஊரிலிருந்து அவர்கள் உம்மை வெளியேற்றுவதற்காக அவர்கள் உம்மை தூண்டிவிட முயற்சிக்கின்றனர். அப்போது, அவர்கள் உமக்குப் பின்னால் சொற்ப காலமே தவிர வசித்திருக்க மாட்டார்கள்.
الترجمة التاميلية - عمر شريف