83. நாம் மனிதனுக்கு அருள் புரிந்தால் (அதற்கு அவன் நன்றி செலுத்துவதற்குப் பதிலாக நம்மை) புறக்கணித்து முகம் திரும்பிக் கொள்கிறான். அவனை ஒரு தீங்கு அணுகினாலோ நம்பிக்கை இழந்து விடுகிறான்.
الترجمة التاميلية
وَإِذَآ أَنۡعَمۡنَا عَلَى ٱلۡإِنسَٰنِ أَعۡرَضَ وَنَـَٔا بِجَانِبِهِۦ وَإِذَا مَسَّهُ ٱلشَّرُّ كَانَ يَـُٔوسٗا
நாம் மனிதனுக்கு அருட்கொடைகளை வழங்கினால் அவன் (நன்றி செலுத்தாமல்) புறக்கணித்து(த் தோளை உயர்த்திப்) பெருமை கொள்கிறான்; அவனை (ஏதேனுமொரு) தீங்கு தொடுமானால் அவன் நிராசை கொண்டவனாகி விடுகிறான்.
Jan Trust Foundation - Tamil translation
நாம் மனிதனுக்கு அருள் புரிந்தால் (அதற்கு நன்றி செலுத்தாமல்) புறக்கணிக்கின்றான்; (பாவங்கள் செய்து நம்மை விட்டு) தூரமாகி விடுகிறான். அவனை ஒரு தீங்கு அணுகினால் நிராசையுடையவனாக ஆகிவிடுகின்றான்.
الترجمة التاميلية - عمر شريف