ﯠ
                    surah.translation
            .
            
                            
            
    ﰡ
                                                                                                                
                                    ﯤﯥ
                                    ﰀ
                                                                        
                    தூர் மலையின் மீது சத்தியமாக!
                                                                        
                                                                                                                
                                    ﯧﯨ
                                    ﰁ
                                                                        
                    (பெரும்) சுமையை சுமக்கின்ற மேகங்கள் மீது சத்தியமாக!
                                                                        
                                                                                                                
                                    ﯪﯫ
                                    ﰂ
                                                                        
                    மென்மையாக செல்கின்ற கப்பல்கள் மீது சத்தியமாக!
                                                                        
                                                                                                                
                                    ﯭﯮ
                                    ﰃ
                                                                        
                    (அல்லாஹ்வின்) கட்டளைகளை (அவனது படைப்புகளில்) பிரிப்பவர்கள் மீது சத்தியமாக!
                                                                        நீங்கள் வாக்களிக்கப்படுவதெல்லாம் உண்மைதான்.
                                                                        நிச்சயமாக (விசாரணையும்) கூலி கொடுக்கப்படுவது(ம்) நிகழ்ந்தே தீரும்.
                                                                        அழகிய படைப்புடைய வானத்தின் மீது சத்தியமாக!
                                                                        நிச்சயமாக நீங்கள் (இந்த குர்ஆன் விஷயத்தில் ஒருவருக்கொருவர்) மாறுபட்ட பேச்சில் (-மாறுபட்ட கருத்தைக் கூறுவதில்) இருக்கின்றனர்.
                                                                        திருப்பப்படுபவர் இதை விட்டும் திருப்பப்படுகிறார்.
                                                                        
                                                                                                                
                                    ﭟﭠ
                                    ﰉ
                                                                        
                    பொய்யை கற்பனை செய்பவர்கள் அழிந்து போகட்டும்.
                                                                        அவர்கள் (உலக) மயக்கத்தில் மறதியாளர்களாக இருக்கின்றனர்.
                                                                        கூலி கொடுக்கப்படும் நாள் எப்போது வரும் என்று அவர்கள் கேட்கின்றனர்.
                                                                        அவர்கள் நெருப்பின் மீது கிடத்தப்பட்டு வேதனை செய்யப்படுகின்ற நாளில்...
                                                                        உங்கள் வேதனையை சுவையுங்கள்! இது(தான்) நீங்கள் அவசரமாகத் தேடிக்கொண்டிருந்ததாகும்.
                                                                        நிச்சயமாக இறையச்சமுள்ளவர்கள் சொர்க்கங்களில், (அவற்றில் உள்ள) நீரூற்றுகளில் இருப்பார்கள்.
                                                                        அவர்களுக்கு அவர்களின் இறைவன் கொடுத்ததை அவர்கள் (மகிழ்ச்சியுடன்) பெற்றுக்கொள்வார்கள். நிச்சயமாக அவர்கள் இதற்கு முன்னர் நல்லவர்களாக இருந்தார்கள்.
                                                                        அவர்கள் இரவில் மிகக் குறைவாக தூங்குபவர்களாக இருந்தார்கள்.
                                                                        (இரவில் நீண்ட நேரம் தொழுது விட்டு) அதிகாலையில் அவர்கள் பாவமன்னிப்புத் தேடுவார்கள்.
                                                                        யாசிப்பவருக்கும் இல்லாதவருக்கும் அவர்களது செல்வங்களில் உரிமை உண்டு.
                                                                        உறுதியாக நம்பிக்கை கொள்பவர்களுக்கு பூமியில் பல அத்தாட்சிகள் உள்ளன.
                                                                        இன்னும் உங்களிலும் (பல அத்தாட்சிகள் உள்ளன). நீங்கள் உற்று நோக்க மாட்டீர்களா?
                                                                        உங்கள் உணவும் நீங்கள் வாக்களிக்கப்படுவதும் வானத்தில் இருக்கிறது. (-அல்லாஹ்விடம் இருக்கிறது.)
                                                                        வானம், பூமியுடைய அதிபதியின் மீது சத்தியமாக! நிச்சயமாக இது நீங்கள் பேசுவது போன்றே உண்மைதான்.
                                                                        இப்ராஹீமுடைய கண்ணியமான விருந்தினர்களின் செய்தி உமக்கு வந்ததா?
                                                                        அவர்கள் அவரிடம் (வீட்டில்) நுழைந்தபோது “ஸலாம்” கூறினர். (பதிலுக்கு) அவரும், “ஸலாம்” (கூறி, நீங்கள் நான்) அறியாத மக்கள் (என்று) கூறினார்.
                                                                        தனது குடும்பத்தாரிடம் திரும்பிச் சென்று கொழுத்த காளைக் கன்றை (அறுத்து நெருப்பில் சுட்டு) கொண்டு வந்தார்.
                                                                        அதை அவர்கள் பக்கம் நெருக்கமாக்கி, நீங்கள் சாப்பிட மாட்டீர்களா? என்று கூறினார்.
                                                                        (ஆனால், அவர்கள் சாப்பிடவில்லை.) ஆகவே, அவர்களினால் அவர் பயத்தை உணர்ந்தார். அவர்கள் கூறினார்கள்: “பயப்படாதீர்! இன்னும், கல்வியாளரான ஓர் ஆண் குழந்தையைக் கொண்டு அவருக்கு நற்செய்தி கூறினார்கள்.
                                                                        (இதை செவிமடுத்த) அவருடைய மனைவி சப்தத்தோடு முன்னோக்கி வந்து தனது முகத்தை அறைந்தார். இன்னும், (நான் ஒரு) மலடியான கிழவி ஆயிற்றே என்று கூறினாள்.
                                                                        அவ்வாறுதான் உமது இறைவன் கூறினான் நிச்சயமாக அவன்தான் மகா ஞானவான், நன்கறிந்தவன் என்று அவர்கள் கூறினார்கள்.
                                                                        தூதர்களே! உங்கள் காரியம்தான் என்ன? என்று அவர் கூறினார்.
                                                                        நிச்சயமாக நாங்கள் குற்றவாளிகளான மக்கள் பக்கம் அனுப்பப்பட்டுள்ளோம் என்று கூறினார்கள்.
                                                                        களி மண்ணினால் ஆன கல்லை அவர்கள் மீது எறிவதற்காக (நாங்கள் அனுப்பப்பட்டுள்ளோம்).
                                                                        (அது, வரம்பு மீறிய) பாவிகளுக்காக உமது இறைவனிடம் அடையாளமிடப்பட்டதாகும்.
                                                                        ஆக, அதில் நம்பிக்கையாளர்களாக இருந்தவர்களை நாம் (அந்த ஊரில் இருந்து) வெளியேற்றி விட்டோம்.
                                                                        ஆனால், அதில் (அந்த ஊரில்) முஸ்லிம்களுடைய ஒரு வீட்டைத் தவிர (வேறு முஸ்லிம் வீடுகளை) நாம் (அங்கு) காணவில்லை.
                                                                        வலி தரக்கூடிய தண்டனையைப் பயப்படுகின்றவர்களுக்கு அதில் ஓர் அத்தாட்சியை நாம் விட்டுள்ளோம்.
                                                                        இன்னும் மூஸாவி(ன் சரித்திரத்தி)லும், நாம் அவரை ஃபிர்அவ்னிடம் தெளிவான ஆதாரத்தைக் கொண்டு அனுப்பிய போது (பல அத்தாட்சிகள் இருக்கின்றன).
                                                                        தனது பலத்தினால் (பெருமை கொண்டவனாக நமது அத்தாட்சிகளை ஏற்காமல்) விலகினான். (மூஸா) ஒரு சூனியக்காரர்தான் அல்லது ஒரு பைத்தியக்காரர்தான் (இறைவனின் தூதர் அல்ல) என்று கூறினான்.
                                                                        அவனையும் அவனுடைய இராணுவங்களையும் நாம் பிடித்தோம். அவர்களை கடலில் எறிந்தோம். அவனோ பழிப்புக்குள்ளானவன் ஆவான்.
                                                                        ஆதி(ன் சரித்திரத்தி)லும் அவர்கள் மீது நாம் மலட்டுக் காற்றை (-எவ்வித நன்மையுமில்லாத, அழிவை ஏற்படுத்தும் காற்றை) அனுப்பியபோது (பல அத்தாட்சிகள் இருக்கின்றன).
                                                                        அது எதன் மீது (கடந்து) செல்கிறதோ அதை பழைய மக்கிப்போன பொருளைப் போன்று ஆக்காமல் விடாது.
                                                                        சமூதி(ன் சரித்திரத்தி)லும், சிறிது காலம் வரை சுகமாக இருங்கள் என்று அவர்களுக்கு சொல்லப்பட்ட போது (பல அத்தாட்சிகள் இருக்கின்றன).
                                                                        அவர்கள் தங்கள் இறைவனின் கட்டளையை ஏற்காமல் பெருமை அடித்தனர். அவர்களை இடிமுழக்கம் பிடித்தது. அவர்களோ (அந்த வேதனையை) எதிர்பார்த்துக் கொண்டிருந்தனர்.
                                                                        (அல்லாஹ்வின் தண்டனைக்கு முன் எதிர்த்து) நிற்பதற்கு அவர்கள் இயலாமல் ஆகிவிட்டார்கள். அவர்கள் (நம்மிடம்) பழிதீர்ப்பவர்களாகவும் இருக்கவில்லை. (அவர்களால் நமது தண்டனையை எதிர்கொள்ளவும் முடியாது. நாம் அவர்களை தண்டித்தால் நம்மிடம் அவர்கள் பழிவாங்கவும் முடியாது.)
                                                                        இன்னும் நூஹுடைய மக்களையும் இதற்கு முன்னர் (நாம் அழித்தோம்). நிச்சயமாக அவர்கள் பாவிகளான மக்களாக இருந்தனர்.
                                                                        வானத்தை -அதை (நமது) பலத்தால் (முகடாக) நாம் உயர்த்தினோம். நிச்சயமாக நாம் (அவ்வாறு செய்வதற்கு) மிகவும் வசதி (ஆற்றல்) படைத்தவர்கள் ஆவோம்.
                                                                        பூமியை நாம் விரித்தோம். விரிப்பவர்களில் நாம் மிகச் சிறந்தவர்கள்.
                                                                        ஒவ்வொன்றிலும் இரண்டு ஜோடிகளை படைத்தோம், நீங்கள் (அல்லாஹ்வின் படைப்புகளை சிந்தித்து) நல்லுணர்வு பெறுவதற்காக.
                                                                        ஆகவே, நீங்கள் அல்லாஹ்வின் பக்கம் விரண்டு ஓடுங்கள்! நிச்சயமாக நான் அவனிடமிருந்து உங்களுக்கு தெளிவான எச்சரிப்பாளர் ஆவேன்.
                                                                        அல்லாஹ்வுடன் வேறு ஒரு கடவுளை ஏற்படுத்தாதீர்கள். நிச்சயமாக நான் அவனிடமிருந்து உங்களுக்கு தெளிவான எச்சரிப்பாளர் ஆவேன்.
                                                                        இவ்வாறுதான், (தங்களது தூதரைப் பார்த்து இவர்) ஒரு சூனியக்காரர் அல்லது ஒரு பைத்தியக்காரர் (இறைவனின் தூதர் அல்ல) என்று கூறாமல். இவர்களுக்கு முன்னர் சென்றவர்களுக்கு எந்த ஒரு தூதரும் வந்ததில்லை.
                                                                        இவர்கள் தங்களுக்குள் இதை (இந்த தூதரை பொய்ப்பிக்க வேண்டும் என்று) உபதேசித்துக் கொண்டார்களா? (-முன் சென்ற நிராகரிப்பாளர்கள் இக்கால நிராகரிப்பாளர்களுக்கு ஏதும் உபதேசத்தை சொல்லிச் சென்றுள்ளார்களா, நாங்கள் நிராகரித்ததைப் போன்று நீங்களும் உங்கள் நபியை பொய்ப்பிக்க வேண்டும் என்று) மாறாக, இவர்கள் வரம்பு மீறிய மக்கள் ஆவார்கள்.
                                                                        ஆகவே, (நபியே!) நீர் அவர்களை விட்டு விலகுவீராக! நீர் பழிக்கப்பட்டவர் இல்லை.
                                                                        (நபியே!) நீர் நல்லுபதேசம் செய்வீராக! நிச்சயமாக நல்லுபதேசம் நம்பிக்கையாளர்களுக்கு பலனளிக்கும்.
                                                                        ஜின்களையும் மனிதர்களையும் அவர்கள் என்னை வணங்குவதற்கே தவிர (வேறு எதற்கும்) நான் படைக்கவில்லை.
                                                                        நான் அவர்களிடம் எவ்வித உணவையும் நாடவில்லை. அவர்கள் எனக்கு உணவளிப்பதையும் நான் நாடவில்லை.
                                                                        நிச்சயமாக அல்லாஹ்தான் எல்லோருக்கும் உணவளிப்பவன், பலமுள்ளவன், மிக உறுதியுடையவன்.
                                                                        நிச்சயமாக அநியாயம் செய்தவர்களுக்கு (அல்லாஹ்வின் தண்டனையில்) பெரிய பங்குண்டு, அவர்களின் கூட்டாளிகளுடைய பெரிய பங்கைப் போல. ஆகவே, அவர்கள் (இறை தண்டனையை) அவசரமாகத் தேடவேண்டாம்.
                                                                        ஆகவே, நிராகரித்தவர்களுக்கு அவர்கள் வாக்களிக்கப்பட்ட அவர்களின் (தண்டனை) நாளில் (அல்லாஹ்வின் தண்டனை இறங்கும் நாளில்) நாசம் உண்டாகட்டும்.