115. (புசிக்கக் கூடாதென்று) உங்களுக்கு விலக்கப்பட்டிருப்பவை எல்லாம் செத்ததும், இரத்தமும், பன்றியின் மாமிசமும் அல்லாஹ் அல்லாதவற்றின் பெயர் கூறப்பட்டவையும் ஆகும். எவரேனும் பாவம் செய்யும் எண்ணமின்றி, (எவராலும்) நிர்ப்பந்திக்கப்பட்டு (அல்லது பசியின் கொடுமையால் அவசியத்திற்கு அதிகப்படாமல் இவற்றைப் புசித்து)விட்டால் (அவர் மீது குற்றமாகாது. ஆகவே, இத்தகைய நிலைமையில் அவரை) நிச்சயமாக அல்லாஹ் மிக்க மன்னித்து மிகக் கருணை காட்டுவான்.
الترجمة التاميلية
إِنَّمَا حَرَّمَ عَلَيۡكُمُ ٱلۡمَيۡتَةَ وَٱلدَّمَ وَلَحۡمَ ٱلۡخِنزِيرِ وَمَآ أُهِلَّ لِغَيۡرِ ٱللَّهِ بِهِۦۖ فَمَنِ ٱضۡطُرَّ غَيۡرَ بَاغٖ وَلَا عَادٖ فَإِنَّ ٱللَّهَ غَفُورٞ رَّحِيمٞ
(நீங்கள் புசிக்கக் கூடாது என்று உங்களுக்கு அவன் விலக்கியிருப்பவையெல்லாம்; தானே செத்ததும், இரத்தமும், பன்றி இறைச்சியும், எதன் மீது அல்லாஹ்(வின் பெயர்) அல்லாத வேறு (பெயர்) உச்சரிக்கப்பட்டதொ அதுவுமேயாகும் ஆனால் எவரேனும் வரம்பை மீற வேண்டுமென்று (எண்ணம்) இல்லாமலும், பாவம் செய்யும் விருப்பமில்லாமலும் (எவராலும் அல்லது பசியின் கொடுமையாலும்) நிர்ப்பந்திக்கப்பட்டால் (அவர் மீது குற்றமில்லை); நிச்சயமாக அல்லாஹ் மன்னிப்பவனாகவும், கிருபையுடையவனாகவும் இருக்கின்றான்.
Jan Trust Foundation - Tamil translation
அவன் உங்கள் மீது தடுத்ததெல்லாம்; செத்தது, இரத்தம், பன்றியின் மாமிசம், அல்லாஹ் அல்லாதவற்றின் பெயர் கூறப்பட்(டு அறுக்கப்பட்)டவை ஆகியவையாகும். எவர் (விருப்பத்துடன் அதை) நாடியவராக அல்லாமல், (சட்டத்தை) மீறியவராக அல்லாமல் (பசிக் கொடுமையால் மேற் கூறப்பட்ட தடுக்கப்பட்டவற்றில் எதையும் உண்ணவேண்டிய) நிர்பந்தத்திற்குள்ளானாரோ நிச்சயமாக அல்லாஹ் (அவரை மன்னித்து கருணை புரியும்) மகா மன்னிப்பாளன், மிகக் கருணையாளன் ஆவான்.
الترجمة التاميلية - عمر شريف