31. (அவ்வீடு) என்றென்றும் நிலைத்திருக்கக்கூடிய சொர்க்கங்களாகும். அதில் நீரருவிகள் தொடர்ந்து ஓடிக்கொண்டேயிருக்கும். அவர்கள் விரும்பியதெல்லாம் அங்கு அவர்களுக்குக் கிடைக்கும். இறையச்சமுடையவர்களுக்கு இவ்வாறே அல்லாஹ் கூலி கொடுக்கிறான்.
الترجمة التاميلية
جَنَّـٰتُ عَدۡنٖ يَدۡخُلُونَهَا تَجۡرِي مِن تَحۡتِهَا ٱلۡأَنۡهَٰرُۖ لَهُمۡ فِيهَا مَا يَشَآءُونَۚ كَذَٰلِكَ يَجۡزِي ٱللَّهُ ٱلۡمُتَّقِينَ
என்றென்றும் நிலைத்திருக்கக் கூடிய சுவனபதிகளில் அவர்கள் நுழைவார்கள்; அவற்றின் கீழே ஆறுகள் ஓடிக்கொண்டிருக்கும்; அவர்களுக்கு அங்கே அவர்கள் விரும்புவதெல்லாம் கிடைக்கும். இவ்வாறே பயபக்தியுடையோருக்கு அல்லாஹ் நற்கூலியளிக்கிறான்.
Jan Trust Foundation - Tamil translation
(அந்த வீடு) அத்ன் (என்னும்) சொர்க்கங்கள், அவற்றில் அவர்கள் நுழைவார்கள். அவற்றின் கீழ் நதிகள் ஓடும். அவர்களுக்கு அதில் அவர்கள் நாடுவதெல்லாம் உண்டு. இவ்வாறுதான் அல்லாஹ் (தன்னை) அஞ்சுபவர்களுக்கு கூலி கொடுக்கிறான்.
الترجمة التاميلية - عمر شريف