64. (நபியே!) இவர்கள் எவ்விஷயத்தில் தர்க்கித்துக் கொண்டார்களோ அதை நீர் தெளிவாக்குவதற்காகவே இவ்வேதத்தை உம் மீது நாம் இறக்கி வைத்தோம். மேலும், நம்பிக்கை கொண்ட மக்களுக்கு இது நேரான வழியாகவும், ஓர் அருளாகவும் இருக்கிறது.
الترجمة التاميلية
وَمَآ أَنزَلۡنَا عَلَيۡكَ ٱلۡكِتَٰبَ إِلَّا لِتُبَيِّنَ لَهُمُ ٱلَّذِي ٱخۡتَلَفُواْ فِيهِ وَهُدٗى وَرَحۡمَةٗ لِّقَوۡمٖ يُؤۡمِنُونَ
(நபியே!) அன்றியும், அவர்கள் எ(வ் விஷயத்)தில் தர்க்கித்துக் கொண்டிருந்தார்களோ அதை நீர் தெளிவாக்குவதற்காகவே உம் மீது இவ்வேதத்தை இறக்கினோம்; இன்னும், ஈமான் கொண்டுள்ள மக்களுக்கு (இது) நேரான வழியாகவும், ரஹ்மத்தாகவும் (அருளாகவும்) இருக்கிறது.
Jan Trust Foundation - Tamil translation
(நபியே!) இவர்கள் எதில் தர்க்கித்தார்களோ அதை நீர் தெளிவுபடுத்துவதற்காகவும் (மக்கள் எல்லோருக்கும்) ஒரு நேர்வழியாக இருப்பதற்கும் (குறிப்பாக, அதை) நம்பிக்கை கொள்கிற மக்களுக்கு ஓர் அருளாக இருப்பதற்கே தவிர (வேறு எதற்கும்) உம்மீது இவ்வேதத்தை நாம் இறக்கவில்லை.
الترجمة التاميلية - عمر شريف