84. ஒவ்வொரு வகுப்பாரிடமும் (நாம் அனுப்பிய நம் தூதரை, அவர்களுக்குச்) சாட்சியாக நாம் அழைக்கின்ற (நாளை நபியே! நீர் அவர்களுக்கு ஞாபகமூட்டுவீராக. அந்)நாளில் (அத்தூதர்களை) நிராகரித்தவர்களுக்கு (ஏதும் பேசுவதற்கு) அனுமதி கொடுக்கப்படமாட்டாது. அவர்கள் சாக்குப் போக்குச் சொல்லவும் வழியிராது.
الترجمة التاميلية
وَيَوۡمَ نَبۡعَثُ مِن كُلِّ أُمَّةٖ شَهِيدٗا ثُمَّ لَا يُؤۡذَنُ لِلَّذِينَ كَفَرُواْ وَلَا هُمۡ يُسۡتَعۡتَبُونَ
ஒவ்வொரு சமூகத்தாரிலிருந்தும் ஒரு சாட்சியை நாம் எழுப்பும் (நாளை நினைவூட்டுவீராக அந்)நாளில் நிராகரிப்பவர்களுக்கு(ப் புகழ் கூறுவதற்கு) அனுமதி வழங்கப்படமாட்டாது (அல்லாஹ்வுக்குப் பொருத்தமானதை செய்து, அவ்வேளை தண்டனைக்குத் தப்பித்துக் கொள்ளவும்) இடங்கொடுக்கப்பட மாட்டாது.
Jan Trust Foundation - Tamil translation
அந்நாளில் ஒவ்வொரு சமுதாயத்திலிருந்தும் (நாம்) ஒரு சாட்சியாளரை எழுப்புவோம். பிறகு, (தூதர்களை) நிராகரித்தவர்களுக்கு (ஏதும் பேசவும்) அனுமதிக்கப்படாது. அவர்கள் (அதற்கு) காரண(மு)ம் கேட்கப்பட மாட்டார்கள்.
الترجمة التاميلية - عمر شريف