33. (எவரையும் கொலை செய்வது ஆகாதென்று) அல்லாஹ் தடுத்திருக்க, நீங்கள் எம்மனிதனையும் நியாயமின்றி கொலை செய்து விடாதீர்கள். எவரேனும் அநியாயமாகக் கொலை செய்யப்பட்டுவிட்டால், அவனுடைய வாரிசுகளுக்கு(ப் பழிவாங்க) நாம் அதிகாரம் அளித்திருக்கிறோம். ஆனால், (கொலையாளியான) அவனைப் பழிவாங்குவதில் அளவு கடந்து (சித்திரவதை செய்து)விட வேண்டாம். நிச்சயமாக அவன் (பழிவாங்க) உதவி செய்யப்படுவான். (அதாவது: கொலைக்கு பழிவாங்க வாரிசுகளுக்கு உதவி செய்ய வேண்டும்.)
الترجمة التاميلية
وَلَا تَقۡتُلُواْ ٱلنَّفۡسَ ٱلَّتِي حَرَّمَ ٱللَّهُ إِلَّا بِٱلۡحَقِّۗ وَمَن قُتِلَ مَظۡلُومٗا فَقَدۡ جَعَلۡنَا لِوَلِيِّهِۦ سُلۡطَٰنٗا فَلَا يُسۡرِف فِّي ٱلۡقَتۡلِۖ إِنَّهُۥ كَانَ مَنصُورٗا
(கொலையை) அல்லாஹ் விலக்கியிருக்க நீங்கள் எந்த மனிதனையும் நியாயமான காரணமின்றிக் கொலை செய்து விடாதீர்கள்; எவரேனும் அநியாயமாகக் கொலை செய்யப்பட்டு விட்டால், அவருடைய வாரிசுக்கு (பதிலுக்கு பதில் செய்யவோ அல்லது மன்னிக்கவோ) நாம் அதிகாரம் கொடுத்திருக்கிறோம்; ஆனால் கொலையி(ன் மூலம் பதில் செய்வதி)ல் வரம்பு கடந்து விடக் கூடாது நிச்சயமாக கொலையுண்டவரின் வாரிசு (நீதியைக் கொண்டு) உதவி செய்யப் பட்டவராவார்.
Jan Trust Foundation - Tamil translation
அல்லாஹ் புனிதமாக்கிய உயிரை உரிமையின்றி கொல்லாதீர்கள். எவர் அநீதி செய்யப்பட்டவராக கொல்லப்பட்டாரோ, அவருடைய உறவினருக்கு அதிகாரத்தை நாம் ஏற்படுத்தினோம். ஆகவே அவர் (-அந்த உறவினர் பழிக்குப்பழி) கொல்வதில் அளவு கடக்க வேண்டாம். நிச்சயமாக அவர் உதவி செய்யப்பட்டவராக இருக்கிறார். (கொன்றவனை கொன்று பழிதீர்க்க அல்லது நஷ்டஈடு பெற கொல்லப்பட்டவரின் வாரிசுகளுக்கு அரசாங்கம் உதவ வேண்டும்.)
الترجمة التاميلية - عمر شريف